செஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி
செஞ்சீனா சென்றுவந்தேன் 22 பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன் 23 நவம்பர் 2014 கருத்திற்காக.. 22. மக்கள் சீனத்தின் எதிர்காலம்? இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை அமையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை. எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி முற்றதிகார வீழ்ச்சியை ஒட்டுமொத்த பொதுவுடைமை வீழ்ச்சியாகவே கொண்டாடுவார்கள். அதுதான் அவர்களுக்குத் தேவையும்! ஒருவேளை, மாவோ காலத்தைப் போல சீன உழைக்கும் மக்கள் மீண்டும் வல்லாளுமைக் கொள்ளைகளுக்கு எதிராகத் திரண்டெழுந்தால், ”சீன மக்கள் குடிய...