Ilakkuvanarin pataippumanikal 95: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது.
இலக்குவனாரின் படைப்பு மணிகள்
95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது.
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ், தொன்மையும் வளமும் உடையது. ஆங்கிலமே தோன்றப் பெறாத காலத்தில் அஃது உயர் தனிச் செம்மொழியாக விளங்கியது. ஆங்கிலேயரைப் போன்று தமிழர்களும் திரைகடல் ஓடியும் செல்வம் ஈட்டினர்; கடல் கடந்தும் நாடுகளை வென்றனர். ஆனால் ஆங்கிலேயரைப் போன்று தம் மொழியைப் பிறர்மீது சுமத்தவில்லை. சென்றனர்; வென்றனர்; திரும்பினர். தமிழரும் ஆங்கிலேயர் வழியை-பிறரை அடிமைப் படுத்தும் வழியை மேற்கொண்டிருப்பின் இன்று தமிழும் உலகப் பொது மொழியாக ஆகும் தகுதியைப் பெற்றிருக்கும்.
(பழந்தமிழ் பக்கம் 35)
Comments
Post a Comment