Ilakkuvanarin pataippumanikal 90: Script of thamizhs: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 90. தமிழர்கள் எழுத்து முறை
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 90. தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது.
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011
தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் “தொல்காப்பியம்” தமிழ் எழுத்து துறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (objcet) சுட்டுவதின்று.
(பழந்தமிழ்: பக்கம் 26)
முந்தைய பதிவு
Comments
Post a Comment