Ilakkuvanarin pataippumanikal 92 : thamizh script system is the best system: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 92 தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்தது
இலக்குவனாரின் படைப்பு மணிகள்
92 ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்தது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011
ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருப்பத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துக்கள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துக்களினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும்.
(பழந்தமிழ் பக்கம் 27)
Comments
Post a Comment