Posts

Showing posts from November, 2011

Ilakkuvanarin pataippumanikal 98: Tamilnadu is the birth place of humanbeing: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே பதிவு செய்த நாள் : 29/11/2011  உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன. (பழந்தமிழ் பக்கம் 42) 0 முந்தைய பதிவு » தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா ~ அறிவோம் அறிஞர்களை! http://www.natpu.in/?p=18498

Ilakkuvanarin pataippumanikal 97: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று . இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 25/11/2011  உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர். மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின் தாய் என்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும். தமிழே சிதைந்து ஒன்று பலவாய் வேறுபட்டனவாய் இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள மொழிகளில் வெளிப்படுகின்றன. யானை கண்ட குருடர்கள் போன்று இன்று மொழி நூலறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு உரிமையாக்கி உரைத்து மகிழ்...

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 24/11/2011  நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும். பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம். ஆனால் பாரத மொழிகளின் தாய் ஆரியமே; தமிழும் அதன் புதல்விகளுள் ஒன்றே என்று கருதிவிட்டனர். வடவாரியம், இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது. பழந்தமிழோ தனிக்குடும்பத்தைச் சார்ந்தது. மொழிக்குடும்பங்களை ஆராயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி இயல்புகள் உள என்பதை அறியலாகும். (பழந்தமிழ்  பக்கம் 35) 0 ...

Ilakkuvanarin pataippumanikal 95: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது. இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 23/11/2011  தமிழ், தொன்மையும் வளமும் உடையது. ஆங்கிலமே தோன்றப் பெறாத காலத்தில் அஃது உயர் தனிச் செம்மொழியாக விளங்கியது. ஆங்கிலேயரைப் போன்று தமிழர்களும் திரைகடல் ஓடியும் செல்வம் ஈட்டினர்; கடல் கடந்தும் நாடுகளை வென்றனர். ஆனால் ஆங்கிலேயரைப் போன்று தம் மொழியைப் பிறர்மீது சுமத்தவில்லை. சென்றனர்; வென்றனர்; திரும்பினர். தமிழரும் ஆங்கிலேயர் வழியை-பிறரை அடிமைப் படுத்தும் வழியை மேற்கொண்டிருப்பின் இன்று தமிழும் உலகப் பொது மொழியாக ஆகும் தகுதியைப் பெற்றிருக்கும். (பழந்தமிழ்  பக்கம் 35) 0 முந்தைய பதிவு » http://www.natpu.in/?p=18112

Ilakkuvanarin pataippumanikal 94: we ignore thamizh: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 94 ஆங்கிலத்தையே போற்றி வந்தோம்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  94 தமிழர்களாகிய நாம் நம் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்து  ஆங்கிலத்தையே போற்றி வந்தோம். http://www.natpu.in/?p=18110  இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 22/11/2011  தமிழர்களாகிய நாம் நம் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தையே போற்றி வந்தோம். ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது நமது முன்னேற்றங் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்துவிடுதல் கூடாது அன்றோ. நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து நமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்து விடலாமா? தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில் இருக்கின்றனர். ஆங்கிலம் தமிழுக்கடுத்துக் கற்க வேண்டிய மொழியேயன்றித் தமிழை விடுத்துக் கற்பதற்குரியதன்று. ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் கற்றல் வேண்டும். கல்வி நிலையங்களில் அவ்வாறு கற்பதற்குரிய வசதிகளைச் செய்தல் வேண்டும். (பழந்தமிழ்  பக்கம் 34-35) முந்தைய பதிவு » வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

Ilakkuvanarin pataippu manikal 93: Tahmizh family languages is correct: திராவிட மொழிகள் எனக் கூறற்க! தமிழ்க் குடும்ப மொழிகள் என்க!

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  93. உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 21/11/2011  இலக்குவனாரின் படைப்பு மணிகள் 93 உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும். (பழந்தமிழ்  பக்கம் 30) http://www.natpu.in/?p=18108

Ilakkuvanarin pataippumanikal 92 : thamizh script system is the best system: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 92 தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்தது

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  92 ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்தது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 20/11/2011  ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருப்பத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துக்கள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துக்களினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும். (பழந்தமிழ்  பக்கம் 27) 0 முந்தைய பதிவு http://www.natpu.in/?p=18106  

Ilakkuvanarin pataippu manikal 91 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 91 உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  91 உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 19/11/2011  உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே என்றும் தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர் ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுள்ளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகிறது. (பழந்தமிழ்  பக்கம் 26) 0 முந்தைய பதிவு »   http://www.natpu.in/?p=18104    

அரமும் மரமும் - குறள் விளக்கம்: முனைவர் மறைமலை இலக்குவனார்

அரமும் மரமும் முனைவர் மறைமலை இலக்குவனார் பதிவு செய்த நாள் : 19/11/2011  “அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் (997)” என்னும் குறள் பண்புடைமை என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. மக்கட்பண்பு இல்லாதவர்கள் அரம் போன்ற கூரிய அறிவு பெற்றிருந்தாலும் மரத்துக்குச் சமமாகவே மதிக்கத்தக்கவர்கள் என்று இதற்குப் பொருள் கூறப்பட்டு வருகிறது. ஒப்புயர்வற்ற உரையாசிரியர் பரிமேலழகரும் இத்தகைய பொருளிலேயே உரை வகுத்துள்ளார். ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில் “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்(216)” என்னும் குறள் மூலம் ‘ஒப்புரவு என்னும் சிறந்த ஒழுக்கத்தையுடைய நேர்மையாளனிடம் செல்வம் சேருமாயின் அது பயன் தரும் மரம் உள்ளூரில் பழுத்ததற்குச் சமம் ‘என்று கூறும் வள்ளுவர் மரத்தை இங்ஙனம் தாழ்வாக மதிப்பிடுவாரா என்னும் வினா எழுகிறது. அரம் போலும் கூர்மையான அறிவு இருந்தாலும் மக்கட்பண்பு இல்லாமல் போய்விடுமாயின் அந்த அறிவினால் பயன் இல்லை; அந்தக் கூர்மையான அறிவு தீய செயல்களுக்கு வழிவகுத்துவிடலாம் என்பதே இக்குறள்...

Ilakkuvanarin pataippumanikal 90: Script of thamizhs: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 90. தமிழர்கள் எழுத்து முறை

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 90. தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 18/11/2011  தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் “தொல்காப்பியம்” தமிழ் எழுத்து துறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (objcet) சுட்டுவதின்று. (பழந்தமிழ்:  பக்கம் 26) 0 முந்தைய பதிவு   http://www.natpu.in/?p=18101  

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 89. போற்றத் தகுந்த பேரறிஞர் ஈராசு

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 89. பேரறிஞர் கால்டுவல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார். பதிவு செய்த நாள் : 17/11/2011  பேரறிஞர் கால்டுவல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார். அவர் தம்மைத் திராவிடர் என்றே அழைத்துக்கொண்டார். அவர் மறைந்த மாநகரங்களான ஆரப்பா மொகஞ்சதாரோ எனும் இரண்டைப் பற்றி நன்கு ஆராய்ந்து அங்கு வழங்கிய மொழி தமிழே என்று நிலைநாட்டியுள்ளனர். அவர் கூறியுள்ள ஆராய்ச்சி யுரைகள், “பழந்தமிழே இந்திய மொழிகளின் தாய்” என்பதை நிலைநாட்டத் துணைபுரிந்துள்ளன. (பழந்தமிழ்  பக்கம் 15)   முந்தைய பதிவு » வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது http://www.natpu.in/?p=18099

Ilakkuvanarin pataippumanikal 88: Pazhanthamizh: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 88. வேறுபாடு இதுதான்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 88. வேற்று நாட்டவர்க்கும் நம் நாட்டவர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான். இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 16/11/2011  வேற்று நாட்டவர்க்கும் நம் நாட்டவர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான். வேற்று நாட்டவர் இங்கு வந்து நம் மொழியைக் கற்றாலும் தம் மொழியை மறப்பது கிடையாது. ஆனால் நம் நாட்டவரோ வேற்று மொழியைக் கற்கத் தொடங்கியதும் தம் தாய் மொழியை மறக்கத் தொடங்கி விடுகின்றனர். ’போப் எனும் ஆங்கிலேயர் இங்கு வந்தார்; தமிழைக் கற்றார்; புலமை பெற்றார். ஆனால் தம் மொழியாம் ஆங்கிலத்தை மறந்திலர். தமிழில் உள்ள சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதே காலத்தில் ஆங்கிலத்தைக் கற்ற நம் தமிழருள் எத்துணைபேர் ஆங்கிலத்துள் உள்ளனவற்றைத் தமிழில் பெயர்த்தனர்? யாருமிலரே! இந்நிலை மாறுதல் வேண்டும். வேற்று மொழியைக் கற்கும் நாம், நம் மொழியை மறவாது அதன் வளத்திற்கு வேற்று மொழியறிவைப் பயன்படுத்த வேண்டும். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” இரண்டும் செய்திடுவோம். அன்றியும் உ...

Ilakkuvanarin pataippumanikal 87: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 87 முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 87 உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ். இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 15/11/2011  உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே தமிழ் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது. மொழியே நம் விழி; மொழியின்றேல் நமக்கு வாழ்வு இன்று; வாழ்வில் வளமும் இன்பமும் பெறல் அரிது. (பழந்தமிழ் பக்கம் 13) 0 முந்தைய பதிவு »   http://www.natpu.in/?p=18094

இல்வாழ்க்கை – [6-10] குறள் விளக்கம்

இல்வாழ்க்கை – [6-10] குறள் விளக்கம் பேராசிரியர் சி.இலக்குவனார் பதிவு செய்த நாள் : 10/11/2011  அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் ?                                   (46) அறத்து ஆற்றின்=அறவழியில், இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, ஆற்றின்=செலுத்தினால், (எல்லா இன்பங்களையும் எய்துதல் கூடும்.) புறத்து ஆற்றில்=அறத்திற்குப் புறம்பாகிய தீயநெறியில், போஓய்=சென்று, பெறுவது எவன்=அடைவது என்ன? இல்லற வாழ்க்கையை அறநெறியில் செலுத்தினால் நல்லின்பங்களை நன்கே பெறலாம். சிலர் அங்ஙனமின்றி அறநெறியினின்றும் விலகி மறநெறியில் வாழத் தலைப் படுகின்றனர். இஃது, அறநெறியில் செல்வதினும் தீய நெறியில் செல்லுதலை எளிதாகக் கருதுவதனால் உண்டாகும் விளைவாகும். ஆனால், அறத்திற்குப் புறம்பான நெறியில் எதனையும் எய்திவிட முடியாது. எய்துவதுபோல் தோன்றினும் பின்னர் நிலைத்த...

Ilakkuvanarin pataippu manikal 86 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 86. தமிழக வரலாற்றின் முதற்பகுதியே தொல்காப்பியம்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 86. தமிழக வரலாற்றின் முதற்பகுதியே தொல்காப்பியம்   இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 05/11/2011  தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது.  தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று  இருந்தது.  அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம்.  தொல்காப்பியத்தால் மொழி நிலை -  இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்.  இவ்வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால மொழியின் சிறப்பையும் இலக்கியவளச் சிறப்பையும் எடுத்துக்காட்டும்.  தொல்காப்பியர் கால மக்கள் வாழ்வு பற்றித் தனியாக ஒரு நூலில் ஆராய எண்ணியுள்சோம். தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன.  பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிவதற்கு இவையன்றிப் பிற சான்றுகளை நாம் பெற்றோம் இல்லை.  எனவே தமிழக வரலாற்றின் முதற்பகுதியே இந்நூல் எனக்கொள்ளுதல் தகும். ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம் 285)   http://www.natpu.in/?p=17653 ...

Ilakkuvanarin pataippu manikal 85 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 85. தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 85. தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 04/11/2011  தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார்.  அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை.  தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.  ஆதலின் ஆங்கிலம் அகன்றால்  அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும்.  பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும். ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284:285) http://www.natpu.in/?p=17556

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 84. தமிழைப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  84. தமிழைப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 03/11/2011  தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும்.  பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும். ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284)   http://www.natpu.in/?p=17292

Ilakkuvanarin pataippu manikal 83 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 83. தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  83. தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 02/11/2011  இன்று தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சி புரிகின்றது.  பிற நாட்டார் தலைவணங்கும் இலக்கியங்கள் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவே இல்லை.  பிற துறைகளில் உண்டாகும்.  வறுமையைப் பிற நாட்டினர் துணை கொண்டு போக்கிக்கொள்ள இயலும்.  ஆனால் இலக்கிய வறுமையைப் போக்கப் பிற நாட்டினர் துணை பயன்படாது.  இந்நாட்டில் உள்ளவர்களிடையே இனிய புலவர்கள் தோன்றுதல் வேண்டும்.  தோன்றும் புலவர்கள் தொல்காப்பியத்தைக் கற்று அதன் மரபினை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.  அறிந்து அகமும் புறமும் வண்ணமும் வனப்பும், நூலும் உரையும், ஆற்றுப்படையும் பாடாண் பாட்டும் மீண்டும் மலரச் செய்தலில் ஊக்கம் காட்டுதல் வேண்டும். ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 283) http://www.natpu.in/?p=17249

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 82. முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 82. முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது. இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 01/11/2011  இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர்களும் பெருகி வருகின்றனர்.  மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்றுகின்றனர்.  அவர்கள் தமிழிலக்கண மரபை அறியாமலும தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச் செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர்.   முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது. ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282) http://www.natpu.in/?p=17155