Posts
Showing posts from August, 2010
- Get link
- X
- Other Apps
மொழிப் பயிற்சி: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்! 2 கவிக்கோ.ஞானச்செல்வன் First Published : 08 Aug 2010 11:25:16 AM IST Last Updated : ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக... அச்சுறுத்த வேண்டா: ""தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா. தமிழில், ""எழுத்தெனப் படுவஅகரமுதல் னகர இறுவாய்முப்பஃது என்ப...'' என்றார் தொல்காப்பியர...
- Get link
- X
- Other Apps
இந்த வாரம் கலாரசிகள் First Published : 08 Aug 2010 12:00:00 AM IST Last Updated : சில நாள்களுக்கு முன்பு வடலூர் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. ஞானசபையில் சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்துவிட்டு வெளியே வந்ததும், மனது பஞ்சுபோல லேசாகிவிட்ட உணர்வு. அண்ட சராசரங்கள் அனைத்துமே அருட்பெருஞ் ஜோதியின் தனிப்பெருங் கருணையினால் இயங்கும் உண்மையை உள்ளம் உணர நேர்ந்தது.அதுவரை சென்றுவிட்டு தவத்திரு ஊரன் அடிகளாரை தரிசிக்காவிட்டால், அது தமிழுக்கும் சமயத்துக்கும் செய்யும் அபசாரம். வள்ளலாரைத் தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு துறவை வரித்துக்கொண்ட தமிழ்த் தொண்டர் ஊரன் அடிகளார்.சன்மார்க்க தேசிகன் என்றால் யாருக்கும் தெரியாது. அதுதான் அவருடைய தீட்சா நாமம். பூர்வாசிரமத்தில் திருச்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இர...
- Get link
- X
- Other Apps
இளவேனிற் காலத்து இனிய காட்சி அ.சுப்ரமணியன் First Published : 08 Aug 2010 12:00:00 AM IST Last Updated : தமிழ் மக்கள் ஓர் ஆண்டு காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்துக்கொண்டனர். அவைகளில் இளவேனிற் காலம் மட்டுமே வசந்தகாலம். தலைவனைப் பிரிந்து தவிக்கின்ற தலைவிக்குக் கசந்தகாலம். வாழ்வில் இன்பம் தருகின்ற இளவேனிற் காலத்தை, கலித்தொகை மிக அழகாக விவரிக்கிறது.வைகை ஆற்றின் இரு கரைகளிலும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆண்கள் மனம் விரைவில் கரைந்து விடுவதுபோல பேசும் மடப்பத்தை, ஆண் மானின் பிணையான பெண் மானின் மிரண்ட பார்வையுடைய பெண்கள் முத்துப்பல் விரிவதுபோல எங்கும் அரும்பி பூத்துக்குலுங்குகின்ற முல்லை மலர்கள். களவியில் திளைத்துக் கலைந்த மகளிரின் கூந்தல்போல ஈரமான வைகை மணலிலே பூந்தாதுக்களும் தளிர்களும் விழுந்துகிடந்தன. இப்படி இனிய காலமான இ...
- Get link
- X
- Other Apps
நன்னெறி First Published : 15 Aug 2010 01:04:00 AM IST Last Updated : துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்காழ் ஒன்று உயர்திண் கதவு வலியுடைத்தோதாழ் ஒன்று இலதாயின் தான். (பாடல்-32)அழகிய நெற்றியையுடைய பெண்ணே! வைரம் பாய்ந்த மிகவும் வலிமை மிகுந்த கதவானாலும், ஒரு தாழ்ப்பாள் இல்லாவிட்டால் அதற்கு வலிமை கிடையாது. அதுபோல, பெருமை வாய்ந்த நூல்களின் பயன்களை உணரக்கூடிய அறிவு இல்லாதவர் செய்யும் அறங்கள் பயனற்றவையாகும்
- Get link
- X
- Other Apps
இந்த வாரம் கலாரசிகன் First Published : 15 Aug 2010 01:02:00 AM IST Last Updated : முன்பே ஒரு முறை, "காலச்சுவடு' வெளியிட்டிருந்த எல்லீஸின் புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தேன். 1796-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் இளம் அதிகாரியாக சென்னை வந்து சேர்ந்த ஆங்கிலேயர்தான் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே, திராவிட மொழிகளின் தனித்தன்மை பற்றி அறிவித்தவர் இவர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பாட்லியான் நூலகத்தில், இவர் எழுதிய அச்சேறாத கட்டுரை ஒன்றில் தமிழுக்கும் ஹீபுரூ மொழிக்கும் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எல்லீஸ். மனித வாழ்வு பற்றிய நூல்கள் தமிழில் உள்ள அளவு வேறு ஆசிய மொழிகள் எதிலுமே கிடையாது என்ப...
- Get link
- X
- Other Apps
தமிழைப் பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்! First Published : 01 Aug 2010 01:56:57 AM IST Last Updated : செம்மொழித் தமிழ் என்பதன் அனைத்து விளக்கங்களும் செந்தமிழ் என்னும் சொல்லுள் அடக்கம். "தன்னேரிலாத தமிழ்' என்னும் நம் தாய்மொழி, இந்நாளில் செந்தமிழாக இல்லாமல் சிதைந்த தமிழாக மாறிவருகிறது. நம் மக்கள் பேச்சு வழக்குகளிலும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், திரைப்படம் முதலிய ஊடகங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் தமிழ் சிதைக்கப்பட்டு வருகிறது.தமிழ்மொழி தமிழாசிரியர்களுக்கு மட்டுமோ, தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமோ சொந்தமன்று; தமிழர் அனைவர்க்கும் உரிமையுடைய அரிய கருவூலம் அது. தமிழில் பேசுவதைத் தாழ்வாகக் கருதும் பெருமக்கள் (?) இன்றும் இருக்கிறார்கள். தமிழ்தானே எப்படிப் பேசினால் என்ன? எழுதினால் என்ன? என்று ஏளனப் பார்...
- Get link
- X
- Other Apps
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: தொல்காப்பியர் காலம் - சர்ச்சை முடிவுக்கு வருவது எப்போது? தமிழண்ணல் First Published : 08 Aug 2010 12:00:00 AM IST Last Updated : தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும் கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது.இப் பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு, சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்புகொண்டது.இன்றைய அகழாய்வுகளும், கல்வெட்டு ஆய்வுகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் நூல்கள் கிறித்தவ ஊழிக்கு முற்பட்டனவே என நிறுவுமாறு சான்றுகள் மிகப்பல கிடைத்து வருகின்றன. இதனால், இம் முடிவில் தொடர் ஆய்விலேயே இருந்த...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியம், வேதங்களுக்கு முந்தைய நூலல்ல! பத்திரிகையாளர் கே.சி.லட்சுமிநாராயணன் First Published : 15 Aug 2010 01:03:00 AM IST Last Updated : கோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டதாகத் தொல்காப்பியம் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் என்று தினமணி 25-6-2010 அன்று தெரிவித்திருந்தது. வேதத்துக்கு முந்தையது தொல்காப்பியம் என்ற முனைவர் நெடுஞ்செழியன் கருத்துக்குத் தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் ஆதரவாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.சிறப்புப் பாயிரம்:தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியு...
- Get link
- X
- Other Apps
அமீர் குஸ்ரு எனும் வரலாற்றுப் புலவன் அருணன் ஞாயிறு, 25 அக்டோபர் 2009 10:12 "அவர் வரலாறு எழுதவில்லை, கவிதை எழுதியிருக்கிறார்" - இப்படி அமீர் குஸ்ரு பற்றிக் கூறியிருக்கிறார் தற்காலத்திய மேற்கத்திய வரலாற்றாளர் ஒருவர். இதைப் பாராட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் அவரது கவிதைகளில் வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது அல்லது வரலாற்றை அவர் கவித்துவமாக எழுதியிருக்கிறார். இன்றைய உத்தரப்பிரதேசத்தில் கி.பி.1253ல் பிறந்தவர் குஸ்ரு. தந்தையார் ஒரு ராணுவத் தளபதி. பெர்சிய மொழியில் கவிதைகளை எழுதித் தள்ளினார் குஸ்ரு. ஐந்து லட்சம் கவிதைகளை எழுதியதாகச் சொல்லப்படுகிறது. இது உயர்வு நவிற்சி அணியாக இருந்தாலும் தற்போது கிடைத்தவற்றை வைத்துப் பார்த்தாலே பிரமாதமான கவித்துவ ஆற்றல் பெற்றிருந்தார் என்பது நிச்சயமாகிறது. "இந்தியக் கிளி" எனப்பட்ட இந்த மனிதர் அனேகமாக அனைத்துக் கவிதை உத்திகளையும் பரிசோதித்துப் பார்த்தவர். "சபாக்கி ஹிந்த்" என்று ஓர் இந்திய பாணியை பெர்சியத்திற்கு வழங்கியவர். தான் இந...