Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி)

பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன்

பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன்

விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை       

—————————————————————

          தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான். 

++++++++++++++++++++++++++++++++++++

ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல்     

          பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட       270

          நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர்

ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின்

வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன்

அரிவைநீ அருளுடன் அந்நகர்க் கேகுதல்        

          புரிகுவை யாயின் பெரும்பயன் வரும்’எனப்   275

          பரிவுடன் சண்டிலி பகர்ந்து வணங்கினள்;     

          சரியென இசைந்தெழு தன்னிகர் பூங்கொடி

அடிகள் திருவடி அன்பொடு வணங்கித்

துடியிடைச் சண்டிலி துணையொடு போந்தவள்     

          ஓங்ககல் நெடுந்தெரு வேங்கைமா நகருள்     280

          நிலவொளி வீசும் நெடுநிலை மாடம்

பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்

மாளிகை புகுந்து மகிழ்வுடன் தங்கி

மீளி மீனவன் மீட்டநற் சுவடியின் 

          துணையொடு தோன்றித் தொழுதவண் இருந்தே     285

          இணையிலா வளத்தன் இளகிய மனத்தன்

பசிதின வருந்திய பைதன் மாக்கட்கு

நசையொடு பொருஞ்சோறு நல்குதல் என்ன

இசைபயில் பசியால் இரப்போர் தமக்கெலாம்        

          காரிகை உவந்த கனியிசை யமுதம்       290

          வாரி வாரி வழங்கினள் பெரிதே    291

—————————————————————

          ஓங்ககல் – நீண்டகன்ற, பகுவாய் – பெரியவாயில், மீளி – சிறந்தவன், பைதல் – வருத்தம்.

++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்