Skip to main content

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம்



(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்-தொடர்ச்சி)

இந்திய வணிகப் பண்டங்கள், சோமாலிக்கண்ணதான, ஆப்பிரிக்கச் சந்தைகளுக்கும், செகொத்திர (Socotra) தீவுக்கும், அனைத்திலும் மேலாக, அராபிய இந்திய வணிகர்களின் சந்திப்பு இடமாகவும் பிற்காலத்தில், கிரேக்க வணிகர்களும் வந்து சந்திக்கும் இடமாகவும், வளம் மிக்க, செல்வச் சிறப்பு வாய்ந்த இடமாகவும் அமைந்த அராபிய நாட்டு ஏடனுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. திருவாளர் வார்மிங்குடன் குறிப்பிடுவது

போல், சோமாலிச் சந்தை வணிகர்களாம் அராபிய ஆப்பிரிக்க மக்கள், இசுபீசெசு (Spices) முனையை மையமாகக் கொண்ட, இந்திய, அராபிய, ஆப்பிரிக்கக் கப்பல் போக்குவரத்து மூலம், கேம்பே (Cambay) இந்தியர்களோடு, நெடிது, நீண்ட வணிகப் போக்குவரத்தினை மேற்கொண்டிருந்தனர் (J.R.A.S. 1910 Page: 13).

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்