Posts

Showing posts from April, 2025

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா?

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         01 May 2025         அ கரமுதல (௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் க௩. தமிழ் வாழுமா? வளருமா?    க.  தமிழ் மக்களின் பேச்சிலும், எழுத்திலும் தமிழில்லை!    உ. தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை!    ௩. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் பல தமிழில்       இல்லை!    ௪. தமிழர் எழுதும் நூல்கள் தமிழில் முழுமையாக       எழுதப்பெறவில்லை.    ரு. தமிழகப் பாடநூல் நிறுவனத்தார் முதல் வகுப்புக்குரிய       தமிழ்ப்பாட நூலில் வடமொழி ஒலியெழுத்துகளாம்        கிரந்த எழுத்துகளை (ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ ) சேர்த்து,       வடமொழிச் சொற்களையும் பாடப்பகுதியில்       இணைத்து உள்ளனர். பிஞ்சு உள்ளத்தில் ...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         30 April 2025         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19.  கோமகன்   மீண்டும்   தோன்றிய   காதை கோமகன் நிகழ்ந்தன கூறல்           இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன்            வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென  135           வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக்                கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம்       140           மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை மேவி விருப்பைச் சொல...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 26 : புலவர் கா.கோவிந்தன்: சேர, சோழ, பாண்டிய அரசுகள்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         25 April 2025         அ கரமுதல ( ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : காத்தியாயனரும் பதஞ்சலியும் – தொடர்ச்சி ) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு     உலகம் தோன்றிய நாள்தொட்டு இருந்த சேர சோழ பாண்டியர் இதைப் பண்டைக் காலத்திய  மதுரை  பற்றிய நாம் அறிந்தனவற்றோடு ஒன்றுபடுத்திக் காணும் முயற்சியில், வெற்றி காணமாட்டாதே, அறிவுத்திறன் பெருமளவில் பாழ்படுத்தப்பட்டது. முன்பே குறிப்பிடப்பட்ட  எறும்பு மனிதர் பற்றிய, அவருடைய வேறு ஒரு கட்டுக்கதை போல  (Macrindle. Ancient India as described by Megasthenes and Arrian. Page : 144) இது, மெகத்தனிசு அவர்களின், எதையும் நம்பும் ஏமாளித்தனத்தை உறுதி செய்யும் மற்றொரு கட்டுக்கதை யல்லது வேறு அன்று. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்திரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்...

௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! – வி.பொ.பழனிவேலனார்

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         24 April 2025         அ கரமுதல ( ௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி ) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது.  அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர். அல்லாமலும், தம் நாட்டு மக்களையும் இங்கு குடியேற்றினர். அதனால், தமிழ் தன் செம்மை, சீர்மை கெட்டு நின்றது. பிறமொழிக் கலப்பு அயலார் ஆட்சிக்குட்பட்ட தமிழகம் அவர்தம் மொழிகளையும் ஏற்க வேண்டிய கட்டாயத...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         23 April 2025         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி) பூங்கொடி 19.  கோமகன்   மீண்டும்   தோன்றிய   காதை வஞ்சியின் வஞ்சினம்           பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன்        தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு 95           குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை            விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத்         100 —————————————————————           திறம்பினள் – மாறினள், உண – உண்ண, பிணை – பெண்மான், தவளம் –...