Posts

Showing posts from April, 2024

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி

Image
  இலக்குவனார் திருவள்ளுவன்         01 May 2024         No Comment (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி) பூங்கொடி அடிகள் தம்மை, அறியார் கூடி 70 நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்; வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும் கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்; தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! என்ற மொழிப்பொருள் உணர்ந்தேன் ஐய! 75 பூங்கொடியின் உறுதிமொழி நின்றன் பெருமையும் நீணிலம் அறியும்; எத்துயர் வரினும் எடுத்த பணியே இலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோ இலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்; பேரா சிரியப் பெரியோய்! நின்போல் 80 யாரே செயல்செய வல்லார்? யானும் நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன், என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே’ எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே; குறளுரை தெளிதல் `மனமிக நல்லாய்! வாழிய பெரிதே! 85 உலகப் பெருநூல் ஓதி உணர்ந்தனை! கலகப் பொருளுடை கடிகதில் அம்ம! புத்துரை பலப்பல காணுதி! யானும் ஒத்த வகையால் உணர்ந்தநல் உரைசில கூறுவென் கேண்மோ’ என்றுரை கூறத் 90 தேறினள் செல்வி தெளிபொருள் உணர்ந்தே வீறுகொள் செம்மல் வி...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு

Image
ஃஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         27 April 2024        அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்- தாெடர்ச்சி) தமிழர் வீரம் வீர விளையாட்டு வீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும்  வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர் . காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக்  கலிங்கத்துப் பரணி யிலே காணலாம்.  மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர்  எனப்படுவர். அன்னார் முற்காலத்து மன்னரால் மதிக்கப்பெற்றனர். முல்லைநில மாந்தராகிய  ஆயர், ஏறு தழுவும் விளையாட்டிற் சிறந்து விளங்கினர் . இன்றும் தமிழ் நாட்டிற் சில பாகங்களில் சல்லிக்கட்டு என்னும் பெயரால் இவ் விளையாட்டு நடைபெறுகின்றது. வேட்டையாடல் தமிழ் நாட்டு மலைகளிலும் கா...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி

  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         24 April 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி ) பூங்கொடி நாவலரின் முன்னை நிகழ்ச்சி யான்புரி அலுவலில் ஏன்விலக் குற்றேன்? மீன்புலி கயலால் மேம்படு தமிழக விடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50 கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன், இவையே யான்செய் தவறென இயம்பி, நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; நாவலர் ஊக்கமூட்டல் மதுப்பூங் குழலி! `மாநிலத் தித்துயர் பொதுப்பணி புரிவோர்க்குப் புதுவ தன்றே! 55 விதுப்புறேல் நின்பணி வீறுற் றோங்கும்' என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்; `நன்றுநன் றைய! நான்அய ரேன்இப் பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; உலகியல் நிலைமை உலக மாந்தர் நிலைதான் என்னே! 60 நிலையிலாக் கொள்கை, நேர்மை இன்மை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள் பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்; மறுநாள் மாறி `மதியே இல்லார், சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65 தொண்டர்தம் பெருமை நல்லன செயலே நாளும் ஆற்றும் வல்லமை பூண்டு வழுவிலாக் குறள்நெ...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         20 April 2024        அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்- தொடர்ச்சி) தமிழர் வீரம் தியாக வீரம் 9. தியாகத்தின் சிறப்பு பிறர்பொருட்டு ஒருவன் தன்னலம் இழக்கும் தகைமையே தியாகம் ஆகும் . தமிழகத்தில் என்றும் தியாகத்துக்குத் தனிப் பெருமையுண்டு. “ தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் ” என்று அத்தகையாரைத் தமிழ்நாடு போற்றுகின்றது. அன்னார் இருத்தலாலே இவ் வுலகம் உள்ளது என்று பாடினான் ஒரு பாண்டியன். 1 குமணனும் இளங்குமணனும் கொங்குநாட்டின் பெருமையெல்லாம் தன் பெருமை யாக்கிக்கொண்டான் ஒரு கொடைவீரன். அவன்  முதிரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். குமணன்  என்னும் பெயருடைய அக் கோமகன், இரப்போர்க்கு இல்லை யென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்தவன். அவ்னைத்  தமிழகம்   பாட்டாலும் உரையாலும் பாராட்டி மகிழ்ந்தது . அதனை அறிந்தான் அவன் தம்பியாகிய இளங்குமணன். அழுக்காறு அவன் மனத்தை அறுத்தது; ‘ முன்னையோர் ஈட்டி வைத்த பணமும், முதிரமலையின் வளமும் கொள்ளை ...

தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! – பழ.தமிழாளன்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         19 April 2024        அகரமுதல தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! 1 சீரார்க்கும்   எண்ணமுடன்  திகழ்கதிராம்                 எழுச்சிநிறை  உணர்வே  பெற்றுச்      செந்தமிழை  இனம்நாட்டை நெஞ்சகத்தே          வைப்பவரைத்  தேரல்   வேண்டும் ! தேராதே  கட்சியையும்  தேர்தலிலே  நிற்ப                           ரையுந்  தேர்ந்தெ  டுத்தால்        தீராத  இன்னலையே  இருகையால்          வணங்கியுமே  அழைத்தல்   ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள...