Posts

Showing posts from June, 2021

சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 July 2021         No Comment சுதந்திரச்   சங்கொலி   கேட்குதடா ! சங்கொலி எழுந்தது சங்கட மழிந்தது தைரியம் கொள்வாய் தமிழ் மகனே! கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும் கவலையெ லாம்விடு தமிழ் மகனே! கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும் குறுகிப் படுத்திடல் இனிவேண்டா! பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும் பேதமை விடுவாய் தமிழ் மகனே! திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும் தீனர்க்க பயக்குரல் சங்கோசை! இருட்டினிற் செய்திடும் யாவையும் மறைந்திடும் எழுந்து கடன்முடி தமிழ் மகனே! சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும் சுதந்திரச் சங்கொலி கேட்குதடா! வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட விடிந்திடும் சஞ்சலம் விட்டிடுவாய்! மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது மயக்கம்விட் டெழுந்தினி மறைபாடு! எங்கணும் யாவினும் இருந்தருள் கடவுளும் இருக்குது பயமிலை எழுந்திரடா! -நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)  

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 13

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 June 2021         No Comment ( அகல் விளக்கு – மு.வரதராசனார்: 12. தொடர்ச்சி ) அகல் விளக்கு குழந்தைகளையும் கட்டுச் சோற்று மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு  மைல்  கணக்காக நடந்து சலிக்காமல் வந்து இந்தத் திருவிழாவில் இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பள்ளத்தில் வீழ்ந்து கிடப்பது என்பதை உணர்ந்தேன். புதுச்சேலை உடுத்துவதற்கு அந்தப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பு, புதுக்காட்சிகளைக் காண்பதற்கு அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு. புது இடங்களுக்கு செல்வதற்குச் சிறுவர்களுக்கு ஒரு வாய்ப்பு, வயலையும் குடிசையையும் உழைப்பையும் மறந்து ஓய்வாகக் காலம் கழிப்பதற்கு ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு, பலரோடு பழகியறியாதவர்களுக்கு பழகுவதற்கு ஒரு வாய்ப்பு, குளித்தறியாதவர்களுக்குக் குளிப்பதற்கு ஒரு வாய்ப்பு, காசு கண்டறியாதவர்களுக்குக் காசை இடுப்பில் செருகி வைப்பதற்கும் எடுத்துச் செலவு செய்வதற்கும் ஒரு வாய்ப்பு, தலையில் கூடையும் மூட்டையும் இல்லாமல் நடந்தறியாத பெண்களுக்குக் கடைத்தெருக்களில் ...

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 June 2021         No Comment ( அகல் விளக்கு – மு.வரதராசனார்:10. தொடர்ச்சி ) அகல் விளக்கு   “அம்மா இறந்த பிறகு அப்பா சிரித்ததை நான் பார்த்ததே இல்லை” என்று பாக்கியமே ஒருமுறை சொன்னார். கணவனும் மனைவியும் அவ்வளவு அன்பாக வாழ்ந்தார்களாம். காதல் மனைவி இல்லாத சூழ்நிலையில் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் எப்படிச் சிரிப்புப் பொங்கி எழும்? என்ன வயது ஆனாலும், காதல் மனைவியிடம் தான் மனிதன் சிறு பிள்ளையாக நடந்துகொள்கிறான். மூப்பு என்பதை உடல் கண்டாலும் உள்ளம் காணாத உலகம் அந்தக் காதல் உலகம் ஒன்றுதானே? அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் வயது அறுபதைக் கடந்தாலும், உள்ளம் இருபதைக் கடப்பதே இல்லை. பத்தைக் கடப்பதும் இல்லை எனலாம். அப்படி அன்பாக இல்வாழ்க்கை நடத்தியவர் ஆகையால், மனைவி இறந்தவுடனே அவருடைய உள்ளம் ஒரே நொடியில் மூப்பு அடைந்து சாக்காடையும் நெருங்கிவிட்டது. அதனால் ஒரு நாளும் தந்தை சிரிக்கப் பார்த்ததில்லை என்று பாக்கியம் சொன்னது உண்மையாக இருக்கலாம். பாக்கியமோ சிரிப்பது குற்றம் என்னும் விதவை வாழ்வை அடைந்த...

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 10

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 June 2021         No Comment ( அகல் விளக்கு – மு.வரதராசனார்: 9. தொடர்ச்சி ) அகல் விளக்கு  பாக்கியம் குழந்தை பெற்றுத் தாயாக விளங்காவிட்டாலும் தாய்மையுள்ளம் நிறைந்த அம்மையார். அதனால் என்னையும் என் தங்கை மணிமேகலையையும் மற்றொரு தாய்போல் இருந்து வளர்த்து அன்பு காட்டினார். ஆனால், இயற்கை பொல்லாதது! வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பாக்கியத்தின் அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் அன்பு மாறுவதைப் படிப்படியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேதனை பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும். மனம் மட்டும் அல்ல, தோற்றமும் அவ்வளவு அழகாகக் கவர்ச்சியாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்கவேண்டிய கட்டான உடம்பும் ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ், அந்த அம்மையாருக்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது. நான் என் தாயின் வயிற்றில் இருந்தபோது பாக்கியத்திற்குத் திருமணம் ஆனதாம். நிறைந்த கர்ப்பமாக இருந்த காரணத்தால் தான் அம்மா அவருடைய திருமணத...

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6: கபிலர்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         23 June 2021         No Comment (சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 5 இன் தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்  6 கபிலர்  –  தொடர்ச்சி ‘பாரியில்லாத வாழ்க்கை பாழாகித் தொலையாதா?!’ என்று மனம் பதைத்தார் புலவர். புல்லிலை எருக்கா யினும் ஏற்கும் தெய்வம் போல, அறிவற்ற மடவரும் மெல்லியரும் சென்றாலும் அருள் சுரக்கும் கருணைத் தெய்வத்தை இழந்த தம் வாழ்வு காரிருளில் மூழ்கிக் கெட்டொழியாதோ என்று உள்ளம் குமுறினார். இவ்வாறு வாயில்லா முல்லைக்கும் வாட்டம் தீரப் பொற்றேர் வழங்கிய வள்ளல் வாய் மூடிக் கிடக்கும் நிலை காணப் பொறாராய், அவன் சென்ற இடம் நோக்கிச் செல்ல-உடற்சுமை நீக்கி உயிர் விடத்-துடித்தார் ; ஆனால், உத்தமன் பாரி உயிர் துறக்குமுன்பே அவனுக்கு உன் அன்பின் செல்வியரைக் காத்துப் பின்னரே உயிர் நீங்குவேன், என்று அளித்த உறுதியை எண்ணினார்; மாவண்பாரிக்குப் பிறந்த மாணிக்கங்களை அழைத்துக் கொண்டு கண்ணீரும் கம்பலையுமாய்க் கதறி அழுது கொண்டே பறம்பு நாட்டினின் றும் பெயர்ந்தார். அந்நிலையில் அப்ப...