தந்தை பெரியார் சிந்தனைகள் 5 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 சூன் 2019 கருத்திற்காக.. ( தந்தை பெரியார் சிந்தனைகள் 4 இன் தொடர்ச்சி) (இ) தடத்தநிலையில் சிவற்றைக் காட்டுதல் பொருத்தமாகும். சொரூப நிலையில் பதி ‘ பரசிவம் ‘ என நிற்குங்கால் அதன் சக்தி ‘ பராசக்தி ‘ என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை நோக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியேயாகும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும், சித்தத்தி லேநின்று சேர்வ துணரும் சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்; இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே . 1 என்ற தாழிசையிலும் இந்த நிலையினைக் காணலாம். பதி உலகத்தை நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட பராசக்தியின் ஒரு சிறு கூறு உலகத்தைத் தொழிபட முற்படும். அதனை ‘ ஆதி சக்தி ‘ என வழங்குவர் 2 இது, சிவம் தோன்றாது உலகமே தோன்றுமா...