Posts

Showing posts from December, 2018

தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 சனவரி 2019         கருத்திற்காக.. தக்காரைப் போற்று! தக்காரை நெஞ்சாரப்             போற்ற வேண்டும் – ஆற்றல் மிக்காரை அரியணையில்             ஏற்ற வேண்டும். தமிழ் காக்கும் நல்லோரைக்             காக்க வேண்டும் – அதுவே தமிழ் வளர நாமாற்றும்             சேவை யாகும். தமிழென்றும் தாழ்வின்றி             தழைக்க வேண்டும் – அந்தத் தமிழ்ச் சேவை செய்துஉயிர்             வாழ வேண்டும். எக்காலும் இந்நோக்கில்             மாற்றம் இன்றி – வாழ்வில் ஏற்றமுடன் பணியாற்றும்   ...

இனமானப் பேராசிரியர் வாழியவே!

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         20 திசம்பர் 2018         கருத்திற்காக.. இனமானப் பேராசிரியர் வாழியவே! பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர் அண்ணா  வழியில் அயரா உழைப்பினர் கலைஞர்  போற்றிய புலமைச் சிறப்பினர் திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி அராவிடம் அனைய ஆரியம் கடிவோர் உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று மலையினும் திண்ணிய நிலையினர் துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர் வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித் தூய்மை  துணிவு நேர்மை  துலங்கித் தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும் பேராசிரியப் பெருந்தகை வாழ்க! உறவெலாம்  சிறக்க  கிளைஞர் தழைக்க குடிவழி  ஓங்குக    உயர்வுடன்  பொலிக நலமிகு வாழ்வும் நனிபொருள் வளமும் கனவிலும் கருதாது கடமை ஆற்றிடும் இனமானப் பேராசிரியர் இனிதே ஊழி பல்லூழி ஒப்பிலா நலனுடன் வாழிய வாழிய  வண்டமிழ் போலவே! -மறைமலை இலக்குவனார் விடுதலை  19.12.2018 (பேரா.க.அன்பழகன் பிறந்த நாள்)

அகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 திசம்பர் 2018         கருத்திற்காக.. (அகநானூற்றில் ஊர்கள் 6/7 இன் தொடர்ச்சி   அகநானூற்றில்    ஊர்கள் -7/7 வல்லம்     மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும்.                  “…………….. சோழர்                  வில்ஈண்டு   குறும்பின்   வல்லத்துப்   புரமிளை ”  (அகநானூறு 336)                 “ நெடுங்கதி   நெல்லின்   வல்லம் ”                                 ...

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         12 திசம்பர் 2018         கருத்திற்காக.. கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை  முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறிய  வரலாற்றுப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்துப் பேரரசையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளை அருமையாக குறிப்பிட்டுள்ளார்.    இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த  ஐயமும் இல்லை.  ‘ திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே ’ என்ற கருத்தினைத் தெரிவித்தவர்கள் தேவநேயப் பாவாணரும் மற்ற மதிப்புக்குரிய தமிழறிஞர்களும். அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில் கொண்டு முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’யைத் தீட்டியுள்ளார்.   மிகச் செழுமையுடனும், வலிமையுடனும் இருந்த பாண்டிய நாட்டிலிருந்து   இளைஞன் ஒருவன் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக இன்றைய பாக்கித்தானில் இருக்கும் மொகஞ்...