“தமிழரசனின் காலத்தின் குறள் பெரியார்” குறித்து மின்னூர் சீனிவாசன்
அகரமுதல 219, மார்கழி 16 - மார்கழி 22, 2048 / திசம்பர் 31 – சனவரி 06, 2018 இலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக.. குளறுபடி நீங்கக் குறள்படிக்க வாங்க! குறள் வெண்பாவின் நடையே – நமக்குக் கொடுக்கும் கருத்துப் படையே! அறமும் புதிதாய்க் கொண்டு – வேல் அரசு உரைத்தார் விண்டு! ஆழ்ந்து படிப்போம் நூலை – நம் அறிவுக் கூர்மை “வேலை” சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத் தொல்லை தீரத் தடுப்பார்! சாதிச் சழக்கும் இன்றி – மதம் சார்ந்த வழக்கும் இன்றி நீதி மனித நேயம் – தோன்றின் நிகழும் மனத்தில் மாயம்! நேர்மை நெருப்புப் பெரியார் – எளியோர் நீடு போற்றர்க் குரியார்! கூர்மை யாய்நற் கருத்தும் – மொழியில் கொழிக்கும் மதியை நிறுத்தும்! கூரிதான எண்ணம் – இனி, கொள்கை முழக்கம் பண்ணும்! நேரிதான முரசு – அடித்தார் நிகரிலா வேலரசு! மின்னூர் சீனிவாசன்