Skip to main content

“தமிழரசனின் காலத்தின் குறள் பெரியார்” குறித்து மின்னூர் சீனிவாசன்

குளறுபடி நீங்கக்

          குறள்படிக்க வாங்க! 


 குறள் வெண்பாவின் நடையே – நமக்குக்
கொடுக்கும் கருத்துப் படையே!
அறமும் புதிதாய்க் கொண்டு – வேல்
அரசு உரைத்தார் விண்டு!

ஆழ்ந்து படிப்போம் நூலை – நம்
அறிவுக் கூர்மை “வேலை”
சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத்
தொல்லை தீரத் தடுப்பார்!

சாதிச் சழக்கும் இன்றி – மதம்
சார்ந்த வழக்கும் இன்றி
நீதி மனித நேயம் – தோன்றின்
நிகழும் மனத்தில் மாயம்!

நேர்மை நெருப்புப் பெரியார் – எளியோர்
நீடு போற்றர்க் குரியார்!
கூர்மை யாய்நற் கருத்தும் – மொழியில்
கொழிக்கும் மதியை நிறுத்தும்!

கூரிதான எண்ணம் – இனி,
கொள்கை முழக்கம் பண்ணும்!
நேரிதான முரசு – அடித்தார்
நிகரிலா வேலரசு!

மின்னூர் சீனிவாசன்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்