பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 192, ஆனி 11 , 2048 / சூன் 25 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 25 சூன் 2017 கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 கொல்லையிலே பூத்துளது என்ற போதும் கொஞ்சுமெழில் நறுமணத்தை அறிவ தற்கே முல்லைக்கும் விளம்பரங்கள் செய்யும் காலம் முத்தமிழில் உள்ளதென நமக்கு நாமே சொல்லுவதால் யாறறிந்தார் உலக மெல்லாம் சொல்லுகின்ற வகையினுக்கே வழியென் செய்தோம் வெல்லுகின்ற இலக்கியத்துக் கருத்தை யெல்லாம் வெளிச்சத்தில் கடைவிரித்தே கூவ வேண்டும் ! கணியனவன் யாதும்ஊர் என்று ரைத்த கருத்தின்று கணி...