அடைமொழி இல்லாத பாடல்
- Get link
- X
- Other Apps
அடைமொழி இல்லாத பாடல்
சங்க இலக்கியங்கள் தொடங்கி, இக்கால இலக்கியங்கள்
வரை ஒவ்வொரு பொருளையும், செயலையும் குறிக்கின்றபோது பெயர், வினைச்
சொற்களுக்கு முன்னர் வினை, பயன், மெய், உரு எனும் உவம அடிப்படையில்
"அடைமொழிகள்' கொடுத்துக் கூறுவது புலவர்களின் வழக்கம். இவ் அடைமொழிகள்
உயர்விற்காகவோ, தாழ்விற்காவோ குறிக்கப்பெறலாம். இதன் மூலம் புலவர்கள் தாம்
எண்ணிய கருத்தைப் பெறவைப்பதுடன், தம் புலமைத் திறத்தைக் காட்டுவதிலும்
சிறந்து விளங்குகின்றனர். பேச்சு வழக்கிலும் அடைமொழிகளின் பயன்பாட்டைக்
காணலாம்.
இத்தகு சிறப்பு வாய்ந்த அடைமொழிகளைப் பயன்படுத்தாமலும் தம்மால் பாட
இயலும் என்று கூறும் தமிழ்ப் புலவர்களும் நம்மில் உண்டு. நிலம், பொழுது,
கரு, உரி என எல்லாப் பொருள்களையும் வருணித்துப் பாடிய பாடல் நூலான
அகநானூற்றில், 400 பாடல்களில் 200 பாடல்கள் பாலைநில வருணனையாகும். மற்ற
சங்க இலக்கியங்களும் வருணையில் இவ்வாறே! ஒன்றுமே இல்லாத பாலை நிலத்தையே
புலவர்களால் வருணிக்க இயலுமென்றால், எல்லா வளங்களும் சிறப்புகளும் வாய்ந்த
மற்ற நிலங்களை வருணிக்க எல்லை ஏது?
வருணனைக்கு அடிப்படையான "அடைமொழி'களே இல்லாமல் இயற்கையின் கொடையாகிய
பறவைகளின் பெயர்கள் இருபதின் தொகுப்பை இடைக்காலப் புலவர் ஒருவர் வெண்பா
யாப்பில் பாடியுள்ளார் என்பது வியப்பிலும் வியப்பன்றோ! அவர்தான் அழகிய
சொக்கநாதப் பிள்ளை; இடம்பெற்ற தொகுப்பு - "தனிப்பாடல் திரட்டு'! இப்பாடலை
"அடைமொழி இல்லாத பாடல்' என்று அடைமொழி கொடுத்தே கூறிவிடலாம் அல்லவா?
""சக்கரவா கங்,கிளி,யாந் தை,நாரை யன்னங்,க
ரிக்குருவி, கெüதாரி, காடை,யன்றில் - கொக்கு,
குயில்,கருடன், காக்கை,புறா, கோழி,யிரா சாளி,
மயில்,கழுகு கோட்டான்,வெü வால்''- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment