தமிழ்ச் செல்வங்கள்: அம்மா - 2
- Get link
- X
- Other Apps
தமிழ்ச் செல்வங்கள்: அம்மா - 2
ஓருவன் வயிறு முட்ட உண்கிறான்; உள்ளவற்றையெல்லாம் -
வைத்தவற்றை எல்லாம் - பிறருக்கும் வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல்
உண்கிறான். அவன் உண்டு போனபின் "அமுக்கு அமுக்கு' என்று அமுக்கிவிட்டான்!
பானை, சட்டி எல்லாம் காலி! அவனுக்கென்ன, வயிறு அண்டா குண்டாவா?
தாழிப்பானையா?' எனப் பொறுமுகின்றனர். மூக்கில் விரல் வைத்து
நோக்குகின்றனர்! அம்மில் இருந்து வயிறு முட்ட உண்ணல் அமுக்குதலுக்கு
ஆகிவிட்டது. "அமுக்கு அமுக்கு' என அமுக்கி விட்டான் என்று கூறுகின்றனர்.
அமுக்குதல் விரிந்தது; ஓடு, தகரக் கூரைகளுக்கும், தாள், தட்டை வைக்கோல் போர்களுக்கும் அமுக்கு வைத்தல், அமுக்குப் போடுதல் உண்டு! கரவானவனை "அமுக்கடிக்காரன்' என்பதும் மக்கள் வழக்கு.
சட்டையில் பொத்தல் இட்டு அதனைப் பொத்தி மூடப் "பொத்தான்' வைத்தல் தையல்கடை வேலை. பொத்தான் வகையுள் அமுக்குப் பொத்தான் என்பது ஒன்று. சட்டையைப் பொத்தல் இடாமல் சட்டைமேல் வைத்துத் தைத்து, அதன்மேல் அமுக்கி மூடுமாறு மூடு பகுதியை ஒரு பக்கத்தில் வைப்பது அமுக்குப் பொத்தான் எனப்படும். அமுக்கு என்பது ஏவல்! கால் கை முதலியவற்றில் எண்ணெய் தேய்த்தல், தலையில் எண்ணெய் தேய்த்தல், முதுகு தேய்த்தல் ஆகியவற்றில் அமுக்கித் தேய்த்தலும், அமுக்கித் தேய்க்க ஏவுதலும் மக்கள் வழக்கு!
சொன்ன சொல்லைக் கேளாமல் தட்டிக் கழிப்பாரையும், எதிரிட்டுப் பேசுவாரையும், ""உன்னை ஓர் அமுக்கு அமுக்கினால்தான் சரிப்பட்டு வருவாய்'' என்பார் உளர்.
இசையரங்கில் பாடத் தொடங்குவோர் "அம்' என்று தொடங்கி மெல்லென ஒலித்து மேல் மேல் செல்லல் வழக்கம். ""அம் எனும் முன் ஆயிரம் பாட்டுப் பாடுவேன்'' என்பது புலவர் தருக்கு மொழி. அவ்வளவு விரைந்து பாடவல்லாராம் அவர்.
குழந்தை தந்த "அம்' என்னும் ஒலி பொதுமக்களுக்கும், புலமையாளர்க்கும் மேலும் சுவையூட்டி வளர்ந்தமை வியப்பாகும்! அம்மா, அம்மை என்பன, எம் அம்மை, எம்மை (தன்மை);
நும் அம்மை, நும்மை (முன்னிலை);
அவன் அம்மை, தம் அம்மை, தம்மை (படர்க்கை) ஆயது! அம் ஆகிய மெல்லினம் (ம்) "அன்' ஆகியது.
அன்னை, அன்னா, அன்னாய், அன்னே என விரிந்தது. ""அன்னே உன்னை அல்லால் ஆரை நினைக்கேனே'', ""அடித்த போதும் அன்னா என்னும் குழவி போல'' எனப் புலமையாளர்களிடம் கிளர்ந்தது. அன்னை, அன்னா - இறைமைப் பொருள் தந்த வகை இது.
அம் ஆகிய மெல்லினம் "ஞ்' ஆகத் திரிந்தது! அஞ்ஞை, அஞ்ஞா, அஞ்ஞே என விரிந்தது. இவையும் அன்னை, என்னை, நின்னை, நுன்னை, தன்னை எனவும் அஞ்ஞை, எஞ்ஞை, நஞ்ஞை, நுஞ்ஞை எனவும் பெருகியது. "அஞ்ஞை நீ ஏங்கி அழல்' என்பது சிலம்பு. அஞ்ஞை மக்கள் வழக்கில் இன்றும் கேட்கலாம். "அம்' மேலும் விரிந்ததைக் காண்போம்.
தொடர்வோம்...

Comments
Post a Comment