என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 June 2024 அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09 இறையனார் அகப்பொருள் உரை -தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 7. மெய்ம் மலிந்து நகைத்தேன் காடு சூழ்ந்த மலைநாட்டு மகன் ஒருவன், குறவர் குடிக் குமரி யொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். தங்கள் குலக் கடவுளாகிய முருகன் உறைவதால் பெருமைப் பெற்ற மலை உச்சியில் தோன்றிய அவன் நாட்டு அருவிகள், கீழே பாய்ந்து அவன் நாட்டுக் காட்டை வளமுறச் செய்வது போலேவே, ஆற்றல் அருள், முதலிய அரிய பண்புகளால் சிறந்த பெரியோனாய அவன், தன்பால் பேரன்பு கொண்டு, தன்னை வாழ்விக்க வந்ததைக் கண்டு, அப்பெண்ணும் அவன் பால் காதல் கொண்டாள். இருவரும் தம் பெற்றோர் அறியாவாறு தம் காதலை வளர்த்து வந்தனர். அவர் காதலும் ஒருவரை இழந்து ஒருவர் உயிர் வாழ்தல் இயலாது ஒருவரை யொருவர் ஒரு நாள் காணாது போயினும் அவர் உயிர் நீள் துயர் கொள்ளும் எனக் கூறுமளவு பெருகி வி்ட்டது. இந்நிலையில், அப்பெண்ணைப் பெற்ற தாய், மகள் மணப்பெறு பருவத்தை அடைந்து விட்டாள்; இனி அ...