இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 01 June 2024 அ கரமுதல ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர் – தொடர்ச்சி ) தமிழர் வீரம் வீரப் புகழ்மாலை வீரமும் ஈரமும் தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தையும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். “ பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு” என்பது அவர் கொள்கை. ஔவையாரும் செல்வரும் புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. “ ஔவை வாக்குத் தெய்வ வாக்கு ” என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர் வாயால் வாழ்த்துப் பெற ஆசைப்பட்டார்கள்; ஒருநாள் ஔவையார் ஒரு சிற்றூரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் செல்வர் இருவர் அவரிடம் போந்து, “அம்மையே உமது வாக்கால் எம்மையும் பாடுக” என்று வேண்டி நின்றார். வசைப் பாட்டு அவ்விருவரையும் நன்றாகத் தெரிந்தவர் ஔவையார். வீரத்திற்கும் அவருக்கும் வெகு...