ஊரும் பேரும் 62 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – விண்ணகரம்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 30 December 2023 அகரமுதல ( ஊரும் பேரும் 61 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – தானமும் தருமமும் – தொடர்ச்சீ) ஊரும் பேரும் விண்ணகரம் தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றாற்போன்று, விட்ணுவின் கோவில் விட்ணுகிரகம் என வழங்கிற்று. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற் றென்பர் . 5 வைணவ உலகம் தலைக்கொண்டு போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஆறு விண்ணகரங்கள் உள்ளன. திருவிண்ணகரம் கும்பகோண்த்திற்கு மூன்று கல் அளவில் உள்ள திருமால் கோவில் திருவிண்ணகரம் என்று விதந்துரைக்கப்பட்டது. 6 ஆழ்வார்களில் நால்வர் அதற்கு மங்களா சாசனம் செய்துள்ளனர். “திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே” என்று நம்மாழ்வார் திருவிண்ணகரத்து அப்பனைப் பாடி யருளினார். அவர் திருவாக்கின் அடியாக ஒப்பிலியப்பன் என்னும் திருநாமம் அப் பெருமாளுக்கு அமைந்தது. அது நாளடைவில் உப்பிலியப்பன் என மருவிற்று . அப்பெயருக்கு ஏற்ப உப்பில்லாத நிவேதனம் அந...