Posts

Showing posts from August, 2021

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 September 2021         No Comment துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4: பேராசிரியர்   வெ . அரங்கராசன்                 துன்பம் துரத்தட்டும் துணிந்து நில்;                 இன்பம் கிட்டும்வரை தொடர்ந்து செல்! அகச்சான்று:   துன்பம் உறவரினும் செய்க, துணி[வு]ஆற்றி,       இன்பம் பயக்கும் வினை.                                                    [குறள்.669]   பொருள்கோள் விரிவாக்கம்:                 து ன்பம் ...

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 26

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 September 2021         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார். 25. தொடர்ச்சி) அகல்   விளக்கு அத்தியாயம் 10 (தொடர்ச்சி) திருவிழாக்களும் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை அளிப்பதனால்தான் மக்கள் மேலும் மேலும் அவற்றை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. மக்கள் கூட்டத்தை மறந்து கடல் அலைகளின் அருகே சென்று நிற்கும்போது என் மனம் அந்த அலைகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள்ளும். இப்படிப் பலவகையிலும் என் உள்ளத்தைக் கவர்ந்த கடற்கரைக்கு வாரந்தோறும் சென்று வர விரும்பினேன். ஆனால், சந்திரனோ முதல் வாரத்தோடு என்னைக் கைவிட்டான். வேறு வேலை, வேறு வேலை என்று சொல்லி வந்தபடியால், கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு நான் அவனைக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதும் சிறுபிள்ளைத் தன்மைபோல் எனக்குத் தோன்றியது. ஒன்றும் தெரியாத சிறு பையன் என்று மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்களோ என்று அஞ்சினேன். அதனால் என் வகுப்பு மாணவர்கள் யாரேனும் அழைத்தபோது அந்த அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கடற்கரைக்குச் சென்றுவந்தேன். சில வாரங்கள...

தமிழர் நாகரிகம்– சி.இலக்குவனார்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         31 August 2021         No Comment   (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  20 –  தொடர்ச்சி) இலக்கியம்   கூறும்   தமிழர்    வாழ்வியல்  ( சங்கக்   காலம் )  21   11. நாகரிகம்                 பண்பாடு அகத்தின் – உள்ளத்தின் – தொடர்புடையது.  நாகரிகம் புறத்தின் பாற்பட்டது.  உணவு, உடை, அணிகலன்கள், வசதி, வாய்ப்புகள், ஊர்தி, வீடு, நகர், வாழ்க்கைமுறை முதலியவற்றின் சிறப்பால் அறியப்படுவது.   உள்ளச் சிறப்பால் உரையாலும், செயலாலும் பண்பாடு வெளிப்படும்.  செல்வச் செழிப்பால் நாகரிகம் உயர்ச்சியும் வளர்ச்சியும் பெறும்.    பண்பாட்டால் நாகரிகம் மாற்றமுறுதலும், நாகரிகத்தால் பண்பாடு வெளிப்படுதலும் உண்டு.   திருவள்ளுவர் புறத்தோற்ற நாகரிகத்திற்கு மிகு மதிப்புத் தாராது பண்பாட்டுச் சிறப்பையே நாகரிகம் என்று கூறியுள்ளார். “...