இலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்!- மறைமலை இலக்குவனார்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 May 2020 No Comment இலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்! இனத்திற்கும் தமிழினுக்கும் ஏற்றம் காண ஈரோட்டார் பாதையிலே நாட்டம் கொண்டு அண்ணாவும் நாவலரும் போற்றும் வண்ணம் எந்நாளும் கழகத்தின் வெற்றிக் காக இரவுபகல் பாராமல் உழைத்த நல்லோர் சுரதாவால் பாராட்டுப் பெற்ற புலவர் பணத்திற்கோ பதவிக்கோ எந்த நாளும் பற்றின்றி வாழ்ந்திருக்கும் கவிஞர் அன்றோ?1 பெருவளப் பூராரென்று சொன்னால் உடனே இளஞ்செழியன் திருமுகமே கண்ணில் தோன்றும்! தமிழ்ப்புலமை மேலோங்கி மிளிர்ந்த தாலே தன்பேச்சால் கவித்திறத்தால் சிறப்பு பெற்றார் நாவலர்க்கும் செழியனுக்கும் தம்பி என்றே நாட்டிலுள்ள அனைவருமே நவில்வர் அன்றோ? பாட்டினிலே ஏட்டினிலே தனித்த...