Posts

Showing posts from May, 2019

ஏனையா? – அருள்மணி

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 மே 2019         கருத்திற்காக.. ஏனையா ? குண்டும்   கொலையும்   என்றுலகம் கொடூர   வழியிற்   செல்வதனைக் கண்டு   காணா   திருப்பதுஏன் ? காரணம்   சொல்வாய்   ஐ .  நா .  வே !                1 உலக   ஒழுங்கை   நிலைநாட்டும் ஓரிட   மாகத்   உனைக்காட்டும் உலக   அமைப்பாம்   ஐ .  நா .  வே ! ஊமை   யானது   ஏனையா ?                        2 திட்ட   மிட்டோர்   இனஅழிப்பைச் செய்த   அரசிற்   குதவியன்று கட்டம்   கட்டமாய்   அழிக்கக் காரண   மானீர்   ஏனையா ?               ...

மறப்போமா? – மாதகலான்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 மே 2019         கருத்திற்காக.. மறப்போமா ? பத்து   ஆண்டுகள்   போனாலும் பழைய   நினைவுகள்   மாறுமோ மொத்த   ஈழத்   தமிழினமும் முடிவைத்   தேடி   ஏங்குகிறோம் !            1 மொத்த   உலகும்   பார்த்திருக்க முள்ளி   வாய்க்கால்   நிலப்பரப்பில் கொத்துக்   குண்டால்   அடிபட்ட கொடூரம்   தன்னை   மறப்போமா ?          2 வாழும்   உரிமை   வேண்டியன்று வன்னி   மண்ணில்   தமிழர்கள் ஆளும்   வருக்கச்   சூழ்ச்சிக்கு ஆட்பட்   டழிந்ததை   மறப்போமா ?               3 முள்ளி   வாய்க்கால்   அவலத்தை மொத்த   ஈழத்   தமிழர்க்கும் கொள்ளி   வைக்கும்   நினைவோடு கொண...

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 – பி.என்.(இ)டயசு

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 மே 2019         கருத்திற்காக.. [திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 1/9 தொடர்ச்சி] திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 ஆனால், ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்          பெய்யெனப் பெய்யும் மழை                                            (குறள்.55) என்னும் குறட்பாவிற்கு திருக்குறள் மக்கள் உரையில் (ஏறத்தாழ பதினாறு) பதிப்புகளில் பாவேந்தரை அடியொற்றி, “மனைவி பயன்மழை போன்றவள்” என்று உரை எழுதியவர், அண்மையில் வரும் பதிப்புகளில், “பத்தினி சொன்னால் மழை பெய்யும்” என்று  அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதித் திருவள்ளுவரைத்  திடுக்கிட  வைப்பார் . தீர்வுக்குத் தெய்வப் புலவரை நாடுகிறோம். குறளாசான் எழுத்தாணியால் காமத்...