முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து -இரெங்கையா முருகன்
அகரமுதல 200, ஆவணி 04, 2048 / ஆகத்து20, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 20 ஆகத்து 2017 கருத்திற்காக.. முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து தமிழ் ஆய்வுலகில் மிக முதன்மையான இடத்தை வகிப்பது மறைமலையடிகள் நூலகம். அந்த நூலகத்தின் தோற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா (பிள்ளை). அந்த நூலக வளர்ச்சிக்குத் தனது அளப்பரிய ஆற்றலைச் செலுத்தியவர் அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசுவாமி. ‘நூலக உலகில் நல் முத்து’ என்று போற்றப்படும் முத்துக்குமாரசுவாமி (வயது 80) கடந்த செவ்வாய் அன்று காலமானார். உலக அளவில் தமிழ் அறிஞர்கள் பலரின் ஆய்வுகளில் உதவியவர் முத்துக்குமாரசுவாமி. தமிழாய்வு தொடர்பான குறிப்புதவிகளைத் தனது நினைவுகளிலிருந்தே தந்து உதவுவார். கிடைக்காத குறிப்புகள் எங்கே கிடைக்கும் என்பதையும் கூறி, அவை கிடைக்கவும் ஆவன செய்யும் தன்மை இவருக்குண்டு என்று பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ம.இரா. அரசு குறிப்பிடுகிறார். இந்தியாவின் முதல் முயற்ச...