சோழர் கால வணிக நகரம்... First Published : 23 Sep 2010 01:35:11 PM IST Last Updated : தஞ்சாவூர் முத்தரையர் என்னும் சிற்றரசு மரபினரின் தலைநகரமாக விளங்கியது. இதை ஏறத்தாழ கி.பி. 850 ஆண்டுகளில் விஜயாலயச் சோழன் கைப்பற்றி சோழ அரசை நிறுவினான். அது முதல் ராஜராஜன் காலம் வரை தஞ்சாவூர் சோழப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது. தஞ்சாவூர் அரசியல் தலைநகரமாக மட்டுமன்றி மிகப் பெரிய உள்நாட்டு வணிக நகரமாகவும், வளஞ்சியர், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பன்னாட்டு வணிகக் குழுக்களும் வந்து தங்கி வணிகம் செய்த சர்வதேச வணிக நகரமாகவும் விளங்கியது என்பதை முதலாம் ஆதித்த சோழன் காலத்திலிருந்து இரண்டாம் ராஜாதி ராஜன் காலம் வரை எழுதப் பெற்ற கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். முதலாம் ஆதித்தன் காலத்தில் மடிகை என்பது வணிகர்க...
Posts
Showing posts from September, 2010
- Get link
- X
- Other Apps
மொழிப்பயிற்சி-6: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன் First Published : 12 Sep 2010 07:46:00 PM IST Last Updated : அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது. அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்: சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை. சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. சிறிய திரை, சின்ன திரை,...
- Get link
- X
- Other Apps
மொழிப்பயிற்சி - 4: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன் First Published : 29 Aug 2010 12:43:46 PM IST Last Updated : 13.பண்டகசாலை பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம். பின் ஏன் சாலை என்று ஒரு சொல். உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம். 14.பதட்டம் நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம். 15.கண்றாவி இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக...
- Get link
- X
- Other Apps
மொழிப்பயிற்சி-7: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன் First Published : 19 Sep 2010 12:09:25 PM IST Last Updated : வல்லெழுத்து மிகா இடங்கள்1. அது, இது, எது முன் மிகாது.(எ-டு) அது பெரிது, இது சிறிது, எது கரும்பு?2. அவை, இவை, எவை முன் மிகாது.(எ-டு)அவை சென்றன, இவை கண்டன, எவை தின்றன?3. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு?(எ-டு) அவ்வாறு சொன்னார், இவ்வாறு செப்பினார், எவ்வாறு கண்டார்?4. ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்களின் முன் மிகாது.(எ-டு) ஒரு கோடி, இரு தாமரை, அறுபதம், எழுசிறப்பு.5. பல, சில முன் மிகாது.(எ-டு) பல சொற்கள், சில பதர்கள், பல தடைகள், சில கனவுகள்.6. உகர ஈற்று வினையெச்சங்கள் முன் மிகாது.(எ-டு) வந்து சென்றான், நின்று கண்டான்.7. அத்தனை, இத...
- Get link
- X
- Other Apps
தொண்டியன்ன இவள் நலனே... சி.மகேஸ்வரி First Published : 12 Sep 2010 01:16:00 AM IST Last Updated : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. "நல்ல குறுந்தொகை' என்ற சிறப்பைப் பெற்ற நூல். குறுந்தொகையில் காணப்படும் நெய்தல் திணையில் அமைந்த புலவர் அம்மூவனார் இயற்றிய பாடல் ஒன்று, தலைவன், தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்டு அவளைப் பிரிய நினைக்கும்போது, தோழி தலைவனைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இதற்கு, இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி கூறியதாக இதன் துறை அமைந்துள்ளது.கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தில், தலைவிக்கு மட்டுமல்லாது அங்குள்ள புன்னை மரத்துக்கும் "விண்மீனைக் கண்டது போன்று மென்மையான அரும்புகள் மலர்ந்துள்ள முடம்பட்டு முதிர்ந்த புன்னை மரத்தின் கரிய கிளையில் புட்கள் மிகுதியாகத் தங்கியிருக்கும் அத்தகைய மென்மையான நிலமாகிய கடற்கரைக்குத் தலைவனே'' என்று உவமை கூறப்பட்டுள்ளது.தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கும் தலைவனைப் பார்த்து,...
- Get link
- X
- Other Apps
மன்றம் வேறு; மண்டபம் வேறு! மா.சின்னு First Published : 12 Sep 2010 01:17:00 AM IST Last Updated : மன்றம் - மண்டபம் ஆகிய இரண்டும் பல பொருள்தரும் இருவேறு சொற்களாகவே நூலாசிரியர்களாôலும் உரையாசிரியர்களாலும் கருதப்பட்டன. மன்று என்பது, அம் சாரியை பெற்று "மன்றம்' என வழங்கப்படுகிறது. சொற்களில் சிலவற்றுக்குத் தலைமைப் பொருள், துணைப்பொருள் என இருவகைப் பொருள் உண்டு. மன்றம் என்பதற்கு, அவை (சபை) என்பதே தலைமைப் பொருள். மன்றம் என்றாலும் மன்றகம் என்றாலும் ஒன்றுதான்.""மன்றகத்தே நம்பி மாடம் எடுத்தது'' (திருமந்திரம்.148) என்பார் திருமூலர். அவையோர் கூடும் இடத்தையே மன்றகம் என்றார். சிலப்பதிகாரத்தில், "கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்' (40) என வருமிட...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியம், வேதங்களுக்கு முந்தைய நூலல்ல! என்னும் பிழை பட்ட கருத்து பத்திரிகையாளர் கே.சி.லட்சுமிநாராயணன் First Published : 15 Aug 2010 01:03:00 AM IST Last Updated : கோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டதாகத் தொல்காப்பியம் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் என்று தினமணி 25-6-2010 அன்று தெரிவித்திருந்தது. வேதத்துக்கு முந்தையது தொல்காப்பியம் என்ற முனைவர் நெடுஞ்செழியன் கருத்துக்குத் தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் ஆதரவாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.சிறப்புப் பாயிரம்:தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார...
- Get link
- X
- Other Apps
மண்டபம் வேறு; மன்றம் வேறு ! ஜோதி மகாலிங்கம் First Published : 05 Sep 2010 12:00:00 AM IST Last Updated : பட்டி மண்டபம் என்பது, சமய உண்மைகளை ஆராய்வதற்குரிய வாத சபை; சமய ஆராய்ச்சி செய்யும் வித்யா மண்டபம் என்பது பழைய உரை விளக்கம். பட்டி மண்டபம் என்பது நிலையான ஓர் இடத்தைக் குறிக்கும்; "மன்றம்' என்பது ஓர் அமைப்பைக் குறிக்கும். மண்டபம் - (கோயில் விழாவுக்கான) கல்தூண்கள் தாங்கிய கூரையோடு நான்கு பக்கமும் திறப்பாக உள்ள சதுர அல்லது செவ்வக வடிவக் கட்டடம். (ஒலியை எதிரொலிக்கச் செய்யும் தன்மை கொண்ட கட்டுமான அமைப்புடன் கூடிய மண்டபத்தையும் குறிக்கும்). நினைவு மண்டபம், திருமண மண்டபம். மைசூர் மண்டபம், பளிங்கு மண்டபம், கண்ணாடி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நவசக்தி மண்டபம் என்பதுபோல நிலையான மண்டபம். (மண்ட...