வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்
(வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும் – தொடர்ச்சி)
வள்ளுவர் சொல்லமுதம்
அத்தியாயம் 5. சொல்லும் செயலும்
மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண்ணங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம் உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும்.
வடமொழியில் வழங்கும் சத்தியம் என்ற சொல்லைத் தமிழர் மூன்று சொற்களால் குறித்ததன் கருத்து உய்த்து உணரற்பாலது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்று கருவிகளும் ஒற்றுமைப்பட்டுப் புரியும் செயலே வெற்றிபெறும் என்பதை அச் சொற்கள் விளக்கி நின்றன. –
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்’ என்று வள்ளுவர் சொல்லுவார்; வாய்ச்சொல்லில் வீரர் ஆகிய சிலர் எதனையும் எளிதாகச் சொல்லிவிடுவர். அதனைச் செயலில் கொணர இயலாது திகைப்பர். ஆதலின் சொல்லிய வண்ணமே திண்ணமாக, செயலைச் செய்து முடிக்கும் உறுதியான எண்ணம் எல்லாருக்கும் வேண்டுவதாகும்.
சொற்கள் இனியன என்றும் இன்னாதன என் றும் இருவகைப்படும். இன்னாச் சொல்லே நான்காகப்பகுத்து நவில்வர். பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்று அவை பகுக்கப்படும். இந் நான்கு சொற்களும் இன்னல் விளைக்கும் வன்சொற் கள் ஆகும். ஆதலின் இனிய சொற்களையே எவ் விடத்தும் எவரிடத்தும் எப்பொழுதும் பேசுதல் வேண்டும். கையிடத்தே குறுஞ்சுவை நிறைந்த கனிகள் இருக்கவும் சுவையற்ற காய்களை உண்பானை என்னென்பது ? உள்ளத்தே இன்சொற்களும் உள்ளனவாக, அவற்றைச் சொல்லிப் பிறரை மகிழ்விக்காது வன்சொற்களைப் பேசித் துன்பத்தை வர வழைத்துக் கொள்வது முறையாகுமோ?
“இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாது.”
என்று கூறுவர் சிவப்பிரகாசர். திங்களின் தண்ணிய கதிர்களைக் கண்டே கருங்கடல் பொங்கியெழும். கதிரவனின் வெங்கதிரைக் கண்டு அக்கடல் பொங்குவ தில்லை. ஆதலின் மென்மதுர வாக்கையே இந்த மேதினி விரும்பி வரவேற்கும் ; வன்மொழியைக் கேட்டு மண்ணுலகம் இகழும் என்பர் முன்னோர்.
“பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை”
என்பர் புலவர். பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லை ‘ என்பது நம் நாட்டுப் பழமொழி. “ நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டா” என்று நீதி ஒதுவார் நம் தமிழ்ச் சான்றோர். வாயின் இயல்பான தன்மை வாய்மையே. அதற்கு முரணாகப் பொய் மொழிவது எத்துணைப் பொருந்தாத செயல் என்பதை நினைந்து பார்க்கவேண்டும். வாய்மைக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர் பெருமான், பிறிதோர் உயிர்க்குச் சிறிதும் துன்பம் விளையாத சொல்லே வாய்மை என்று கூறுவார். பொய்யும் சில வேளைகளில் புரை தீர்ந்த நன்மையைப் பிறர்க்கு விளைக்கு மாயின் மெய்யெனப் போற்றலாகும் என்பது வள்ளு வர் உள்ளம்.
பொய்ம்மையும் வாய்மை விடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்“
என்பது அவரது தெள்ளமுத மொழி.
தீங்கு விளக்கும் வன்சொற்கள் நான்கனுள் புறங்கூறல் என்பதும் ஒன்று. இதனைப் ‘புறங் கூறாமை’ என்ற அதிகாரத்தால் வெறுத்துப் பேசுகிறார் தெய்வப் புலவர். பிறரைப்பற்றி அவர் இல்லாத விடத்து இகழ்ந்து பேசுவதே புறங்கூறல் ஆகும். அதனேயே குறளை என்றும் கூறுவர். பிறரைக் காணாத வழி இகழ்ந்துபேசி, அவரைக் கண்டவழி இனியவனைப்போல நடித்து ஒருவன் உயிர் வாழ்தலினும், இறந்தொழிதல் சிறந்த பயனத் தரும் என்பர் செந்நாப்போதார். ஒருவர் எதிரே நின்று இரக்கமற்ற சொற்களைப் பெருக்கமாகப் பேசினும் பேசுக , அவன் எதிரே இல்லாத வேளையில் அவனைப் பழித்தும் இழித்தும் பேசற்க என்பார். பிறரைப் பற்றிப் புறங்கூற முற்படுவார் அவரிடத்தே உள்ள குற்றங்களை ஆய்ந்து காணுமாறுபோலத் தம் மிடத்தே புறங்கூறலாகிய குற்றம் உள்ளது என்பதை உணர வல்லராயின், அவரது உயிர்க்கு வரும் தீங்கும் உண்டோ ? என்று கேட்டார். தீய புறங்கூற்றின் மூங்கையராய்த் திகழ்வார்க்கு அறங்கூற வேண்டா : என்று ஆன்றோர் அறிவுறுத்துவர்
.இயல்பாகவே கண்ணிமைத்தல் இல்லாத இமையார் ஆகிய தேவர்கள், அங்ஙனம் இமைத்தல் செய்யா மைக்கு அறநெறிச்சார ஆசிரியர் முனைப்பாடியார் காரணம் கற்பிக்கிரு.ர்.
முன்னின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கன்னின்(று) உருகக் கலந்துரைத்துப்-பின்னின்று
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை
என்பது முனைப்பாடியாரின் திருப்பாடல். உலகில் சிலர், ஒருவன் முன்னால் நிற்கும்போது, கல்லும் கனிந்து உருகுமாறு முகத்தால் மலர்ந்து நோக்கி, வாயால் அன்புகனியப் பேசுவர்; அவன் சென்ற பின்னர் அவனை இகழ்ந்து பேசுவர்; இத்தகைய இழி செயல் உடையார் எத்துணை இழிந்தோர் ஆவர். அவர்களைச் சான்ருேர் என்று இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற இயம்புகின்றார், இங்ஙனம் புறங்கூறும் புல்லர்கள், தம்மையும் ஒருகால் இகழ்ந்து பேச முனைந்து விடுவரோ என்று எண்ணிய தேவர்கள் கண்ணிமையாது, அவர்தம் செயலே நோக்குகின்றனர். இங்ஙனம் புலவர் தற்குறிப்பேற்றமாகப் புறங்கூறுவாரை இகழ்ந்து உரைக்கின்றார், .
வன்சொல்லைக் குறிக்கவந்த வள்ளுவர் அடக்க முடைமையில் காவடக்கமும் ஒன்றென விளக்குகின்றார். ‘யா காவா ராயினும் நா காக்க ‘ என்று அன்பு கனிய நல்லுரை பகர்ந்தார். நாவைக் காவாத விடத்து, மக்கள், சொற்குற்றப்பட்டுச் சோகாப்பரே என்று இரங்கி இன்னுரை கூறினார். வன்சொல்லின் தீமையை விளக்கப்போந்த வள்ளுவர்,
தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே
தாவினால் சுட்ட வடு’
என்று அருளிச் செய்தார். நெருப்பினால் சுட்டபுண் உடம்பில் தழும்பாக விளங்கினும் உள்ளத்தில் உடனே ஆறிவிடும். நாவால் கூறிய கொடுஞ் சொல்லால் ஒருவன் உள்ளத்தே ஏற்பட்ட புண் மாறாத வடுவாக, என்றும் ஆறாத புண்ணாக அவனை அலைத்துச் சிதைத்துவிடும். அங்ஙனம் பிறன் உள்ளத்தைப் பெரிதும் வருத்தும் கடுஞ்சொல்லை ஒருவன் உரைத்தால், அச்சொல் உரைத்தவனேயே ஒழியாது வந்து சுடும். ஆதலின் அறிவுடைய நன்மக்கள் எக்காலத்தும் வன்சொல்லை இயம்பார் என்று காலடி நூல் நவிலும்.
காவா(து) ஒருவன்தன் வாய் திறந்து சொல்லும்சொல்
ஒவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து‘
என்பது முனிவர் மொழி.
கடுஞ்சொல் தோன்றுவதற்குக் காரணம் வெகுளியே. ஆதலின் யார்மாட்டும் வெகுளியை மறத்தல் வேண்டும் என்பர் திருவள்ளுவர். சினத்துக்குச் சேர்ந்தாரைக் கொல்லி’ என்றே மற்றொரு பெயர் வழங்குவராயின் அச்சினத்தால் விளையும் கேடு பெரிதென்பதை விளக்கவும் வேண்டுமோ? மனத்தில் சினத்திற்கு இடம் கொடுத்துவிட்டால், அம் மனம் முழுவதையும் தனக்கே உரித்தாக்கிக் கொள்ளும் இயல்பை உடையது அச்சினம். அந்நிலையில் உள்ளத்தினின்று எழும் உணர்ச்சியெல்லாம் கொடுமை நிறைந்த சொற்களாகவே உருவடைந்து வெளிப்படும் என்பதில் என்ன ஐயம்? ஆகவே,
‘உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்கு சினங்காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க‘
என்பர் நன்னெறி ஆசிரியர்.
பயனில் சொல்லும் பிறர்க்குத் துன்பம் விளைக்கும் வன்சொல் ஆகும். இதனை நம் தெய்வப் புலவர், ‘பயனில சொல்லாமை‘ என்ற பகுதியால் கடியுமாறு வற்புறுத்துகிறார் பலரும் வெறுக்குமாறு பயனற்ற சொற்களைப் பேசுவானை எல்லாரும் பெரிதும் இகழ் வர். பயனற்ற சொற்களைப் பலர் முன்னே பகர்வது, நண்பர்க்கு நயனற்ற செயலைச் செய்தலினும் தீதாகும். பன்முறையும் பயனில் சொற்களைப் பகர்வானை மகன் என்றே மதித்தல் கூடாது. அவனப் பத்ர் என்று வெறுத்து ஒதுக்குதல் வேண்டும். ஆ த லி ன், “மக்களே! சொல்லில் பயனுடைய சொல்லுக : பயனிலாச் சொல்லை ஒன்றேனும் சொல்லற்க5’ என்று வள்ளுவர் வற்புறுத்துவார். .
(தொடரும்)
வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்
Comments
Post a Comment