வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 01 March 2024 அகரமுதல (வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அத்தியாயம் 5. சொல்லும் செயலும் மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண்ணங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம் உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும். வடமொழியில் வழங்கும் சத்தியம் என்ற சொல்லைத் தமிழர் மூன்று சொற்களால் குறித்ததன் கருத்து உய்த்து உணரற்பாலது . மனம், மொழி, மெய் ஆகிய மூன்று கருவிகளும் ஒற்றுமைப்பட்டுப் புரியும் செயலே வெற்றிபெறும் என்பதை அச் சொற்கள் விளக்கி நின்றன. – சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்று வள்ளுவர் சொல்லுவார்; வாய்ச்சொல்லில் வீரர் ஆகிய சிலர் எத...