ஊரும் பேரும் 50 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அகத்தீச்சுரம்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 30 September 2023 அகரமுதல ( ஊரும் பேரும் 49 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஈச்சுரம் -தொடர்ச்சி ) ஊரும் பேரும் அகத்தீச்சுரம் நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அண்மையில் அகத்தீச்சுரம் என்னும் ஊர் காணப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்பது தேற்றம். அக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீசுவரமுடைய மாதேவன் என வரும் தொடரால்குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீசுரம் என்பது ஆலய த் தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் அச்சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. 12 அயனீச்சுரம் வட ஆர்க்காட்டு நாட்டிலே வழுவூர் என்னும் ஊர் உண்டு. அவ்வூரில் அமைந்த பழமையான கோயிலின் பெயர் அயனீச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திரு அயனீச்சுரக் கோவிலிற் பழுது பார்ப்பதற்காகவும், பூசனை நிகழ்வதற்காகவும் சாம்புவராயர் என்பார்...