தமிழ்வாழ்க என்றுவெறும் கூச்சல் போட்டால் தமிழ்வாழ்ந்து விடுவதில்லை !உதட்ட சைந்து அமிழ்தென்று சொல்லுவதால் மட்டும் யார்க்கும் அங்கங்கள் நிறைவதில்லை !இயங்க வேண்டும் !
தமிழில்தான் திருமணங்கள், வடவர் தம்மைத் தள்ளிவைத்தே மனைவிழாக்கள் எல்லாம் செய்து தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் ! தமிழாக வாழ்ந்தாலே உயரம் கூடும் !
உத்திரத்தை ஒட்டடைகள் தாங்குமென்று ஒருபோதும் அறிவுள்ளோர் ஏற்ப தில்லை ! சித்திரத்து விளக்கொளிதான் பகலே என்று சிந்திக்க எவர்க்கேனும் துணிவு மில்லை ! நத்தைகள் நீர்சுமந்தே அணைநி ரப்ப நம்பிக்கை கொண்டெவரும் முயல்வ தில்லை ! முத்தமிழை வளர்க்கின்ற முயற்சி யில்நாம் மூங்கைகளாய் முடங்கிவிட்டோம் !மறுப்பும் இல்லை !
புத்தகத்தை அச்சேற்றி விற்று விட்டால் பொன்னுலகு பிறக்குமென்று கனவு கண்டோம் ! தத்துவங்கள் தினம்பேசிக் களைத்து விட்டோம் ! தமிழ்வளர்க்க இயலாமல் இளைத்து விட்டோம் ! மொத்தமாய்க் கவியரங்கம் பட்டி மன்றம் குத்தகைக்கு எடுத்துநாமும் அலசி விட்டு மத்திட்ட தயிராகப் பிரிந்து விட்டோம் ! மாற்றார்க்கு நூறுவழி திறந்து விட்டோம் !
சாதிகளை அரசியலை இனபே தத்தைச் சத்தமின்றி இலக்கியத்தில் நுழைய விட்டோம் ! வீதிகளில் இருந்ததமிழ் வித்தை யெல்லாம் விற்றுவிட்டோம் செல்வந்தர் வாசல் சென்று ! சாதிக்கும் பேரறிவோ இருட்டுச் சந்தில்! சந்தர்ப்ப வாதங்கள் அரசின் நெஞ்சில்! நாதியற்றுக் கிடக்கிறது நாபிச் சொந்தம் ! நமக்குள் ஏன் ஆயிரமாய் பேதம் கொந்தும் ?
தமிழுக்கோ தமிழர்க்கோ ஊறு என்றால் தம்கட்சி தம்சாதி என்றில் லாமல் தமிழறிஞர் ஓரணியில் திரள வேண்டும்! தமிழ்த்தொண்டர் தலைமையில் இயங்க வேண்டும் ! தமிழர்நாம் எனும்நிலையில் மதமும் மீறி சம்மதமாய்க் கைகோர்த்து இணையும் நாளில் தமிழன்தான் இந்தியாவின் தலைமை ஏற்பான் ! தமிழர்கள் இணைந்தாலே எல்லாம் கூடும் !
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment