இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார்
அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09, 2048 / நவம்பர் 19 – நவம்பர் 25, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக.. (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் ( சங்கக் காலம்) 03 முன்னுரை `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம். தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள் முதன்மை இடம் பெறுவதும் தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன் தோற்றுக் காலம் யாதென அறுதியிட்டுரைத்தல் எவராலும் இயலாது. பலவகையாலும் அழிந்தன போக எஞ்சியனவ...