Skip to main content

நான்! – அகரம் அமுதன்


நான்! 


துன்பங்கள் யார்படினும்
துடிக்கின்றவன் பிறர்
கண்ணீரைக் கவிதையாய்
வடிக்கின்றவன்!

கொடுமைக்கு அறம்பாடி
முடிக்கின்றவன்  – அதன்
குரல்வளை நெரித்துயிர்
குடிக்கின்றவன்!

வன்முறை யார்செயினும்
வெடிக்கின்றவன் – அந்தப்
புன்முறை போய்மாளப்
பொடிக்கின்றவன்!

பெயருக்கா எழுதுகோல்
பிடிக்கின்றவன்? –என்றன்
எழுத்தாலே இனப்பகை
இடிக்கின்றவன்!

  • அகரம் அமுதன்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்