யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 196, ஆடி 07, 2048 / சூலை 23, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 23 சூலை 2017 கருத்திற்காக.. யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 தலைவர் வணக்கம் நூலகராய்த் தம்வாழ்வைத் துவக்கி நல்ல நூலாக வாழ்பவர்தாம் மோகன ரங்கம் காலத்தை வெல்கின்ற கவிதை நெய்து கவின்வனப்பைத் தமிழுக்குச் சேர்க்கும் பாவோன் கோலத்தில் எளிமையொடு அரவ ணைப்பில் கோப்பெருமான் பிசிராந்தை நட்பின் பண்போன் மூலத்தொல் காப்பியத்து நூற்பா போன்று முத்தமிழைக் காப்பவர்தாம் ஆலந் தூரார் ! கவிதையொடு நாடகங்கள் புதினம் என்று கருத்தான படைப்புகளை நாளும் படைப்போன் நவிலுமாறு ...