தமிழும் சைவமும்
தமிழும் சைவமும் By dn First Published : 30 June 2013 02:43 AM IST புகைப்படங்கள் 1 2 எல்லாம்வல்ல இறைவனுக்குப் பழைய தமிழ் நூல்களிலும் வட நூல்களிலும் வழங்கிய முக்கண்ணான், உருத்திரன் முதலான பல பெயர்கள் இருக்க, அவற்றுள் ஒன்றான "சிவன்' என்னும் பெயர் மட்டும் ஏனைப்பெயர்கள் எல்லாவற்றினுஞ் சிறந்ததாக எடுக்கப்பட்டு முதல்வனுக்கு வழங்கலானதும், அப்பெயரின் வழியே முழுமுதற் கடவுளை வழிபடுந் தமிழரது கொள்கை அல்லது மதம் "சைவம்' எனப் பெயர் பெறலானதும் மிக்க பழமையுடைய தொன்றென்பதும் மற்றைப் பண்டை மக்களிற் பலர் அச்சொல்லையே இறைவனுக்குச் சிறந்த பெயராக வைத்து வழங்கியவாற்றால் அறியப்படுகின்றது. ÷ஏபிரேயர் தாம் வணங்கிப்போந்த கடவுளைச் "சிகோவா' என்றே அழைத்தனர். உரோமர் அதனைச் "சூபிதர்' என்றே அழைத்தனர்; இவ்வயலவர் வழங்கிய அச்சொற்களெல்லாஞ் "சிவ' என்னுஞ் சொல்லின் திரிபேயன்றி வேறல்ல. மேல்நாடுகளில் அஞ்ஞான்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரின் வாயிலாக "சிவ' என்னுஞ்சொல் அயல்நாட்டு நாகரிக மக்களிடையே பரவினா...