thamizh kadamaigal 15: தமிழ்க்கடமைகள் 15. இந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும்

தமிழ்க்கடமைகள் 15. இந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும்


பதிவு செய்த நாள் : June 2, 2011


மொழி வேற்றுமையால் மனவேற்றுமை விளையும் மொழி ஒன்றுபட்டால் மக்களின் மனமும் ஒன்றுபடும் என்பது மற்றொரு காரணம். இதுவும் அனுபவத்திற்கு முரண்பட்ட பொய்யுரை. சாதிபற்றியும் சமயம் பற்றியும் போராட்டங்கள் நிகழ்வது உண்மை. சாதி சமயப் பிணக்குகளால் கொலை, பழி பாதகங்களும் பகைமையும் ஒரு மொழி பயில்வோருக்குள்ளேயே நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்களும் வேற்றுமை உணர்ச்சிகளை வளர்த்து இன்னல்களை விளைவிக்கும் தீய செயல்களும் கொள்கைகளும் பலவாயிருக்க, அவற்றை அகற்றி ஒற்றுமையை வளர்க்கக் கருதாத மந்திரி இந்தி மொழியை ஆட்சியில் கொணர்ந்து ஒற்றுமை வளர்ப்போம் என்பது மதியின்மையும் ஏமாற்றமும் ஆகும்.
- தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்: இந்திமொழி எதிர்ப்பு:
தமிழ்ப்பொழில் (அக்டோபர் 1937) தரவு:
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்  வாழ்வும் பணிகளும்: பக்கம். 126

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்