thamizh kadamaigal 13: தமிழ்க்கடமைகள் 13. தலை நிமிர்ந்து நிற்க

தமிழ்க்கடமைகள்

13. தலை நிமிர்ந்து நிற்க

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=8168 பதிவு செய்த நாள் : May 30, 2011

… ஆகவே, சங்க காலத்தில் தமிழ் நாட்டின் பரப்பு, வடக்கே திருப்பதியிலிருந்தும் தெற்கே பூமையக்கோடு வரைக்கும் பொருந்தி கிழக்கிலும் மேற்கிலும் கடல்களே எல்லைகளாக இருந்தன.
ஒருகாலத்து வடவிமயம் வரை, தமிழ்நாடாக இருந்தது. பின்னர் விந்தியமலைவரை சுருங்கியது. … பழைய தமிழ்நாட்டின் பரப்பைப் பெறமுடியாது போனாலும், எஞ்சியுள்ள தமிழ் வழங்கும் பகுதிகளை ஒன்றுபடுத்தித் தமிழ்நாட்டின் எல்லையை வரையறுத்தல் வேண்டும். இந்தியமாப் பெருங்கடலைக் குமரிக்கடல் என்றே அழைக்கச் செய்ய வேண்டும்.
உலகப்பொது அரசு ஏற்படும் காலத்து நாம் உலக மக்களுள் ஒரு பகுதியினரே. மற்றைய கண்டங்களிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது நாம் ஆசியக் கண்டத்தினரே. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளாகப் பார்க்கும் காலத்து நாம் இந்தியரே; இந்தியாவிலுள்ள நாடுகளாகப் பார்க்குங்கால் நாம் தமிழரே. ஆதலின், உலகப் பொதுவரிசை விரும்பினாலும், ஆசியாவின் முன்னணியை அமைத்தாலும் இந்தியாவின் இணையற்ற வல்லரசை ஏற்படுத்தினா­லும், ‘தமிழ்நாடு’ எனத் தனிநாடு அமையவேண்டியதே. அவ்விதம் அமைந்தால்தான் முற்கூறிய இந்தியாவின் இணைக்கப்பட்ட வல்லரசிலும், ஆசியாவின் முன்னணிப் போரிலும், உலகப் பொது­மன்றத்திலும் தமிழன் என்று கூறித் தலைநிமிர்ந்து நிற்கமுடியும்.
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்:
சங்க இலக்கியம்: பக்கம். 47 – 48

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்