Posts

Showing posts from July, 2011

thamizkadamaigal 16: தமிழ்க்கடமைகள் 16. சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை

தமிழ்க்கடமைகள்  16. சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : June 2, 2011  இன்றைய நாளில் தமிழை வளம் படுத்துவோமெனத் தலைப்படும் ஒரு சிலர் தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்திருப்பதாகவும், அவற்றை அகற்றுதல் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாததெனவும் கூறுகின்றனர். நூலக வழக்கிலிருக்கும் மொழிகளையும் அவற்றின் எழுத்திலக்கணங்களையும் இக்கொள்கை­யினர் நடுநின்று ஆய்வரெனில், பிற மொழிகளிற் காணும் குறைபாடுகள் சொல்லிறந்தனவென்றும், தமிழ் மொழியில் அத்துணை குறைபாடுகள் இல்லை என்றும் காண்பர். கார்மர் பிரபு (Lord Cormer) என்ற ஆங்கிலப் புலவர் தம் மொழியின் எழுத்திலக்கணத்திற் காணப்பெறும் குறைகள் சிலவற்றைத் தொகுத்து, அவை புலனாகுமாறு இக்கவியில் விளக்குகின்றனர். “In the English tongue we speak, Why is “break” not rhymed the “freak”? well you tell me why it is true, We say sew but likewise “Jew”? Board Sounds not the same as “heard” “Cord” is different from “Word” And since “pay...

thamizh kadamaigal 15: தமிழ்க்கடமைகள் 15. இந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும்

தமிழ்க்கடமைகள் 15. இந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும் பதிவு செய்த நாள் : June 2, 2011  மொழி வேற்றுமையால் மனவேற்றுமை விளையும் மொழி ஒன்றுபட்டால் மக்களின் மனமும் ஒன்றுபடும் என்பது மற்றொரு காரணம். இதுவும் அனுபவத்திற்கு முரண்பட்ட பொய்யுரை. சாதிபற்றியும் சமயம் பற்றியும் போராட்டங்கள் நிகழ்வது உண்மை. சாதி சமயப் பிணக்குகளால் கொலை, பழி பாதகங்களும் பகைமையும் ஒரு மொழி பயில்வோருக்குள்ளேயே நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்களும் வேற்றுமை உணர்ச்சிகளை வளர்த்து இன்னல்களை விளைவிக்கும் தீய செயல்களும் கொள்கைகளும் பலவாயிருக்க, அவற்றை அகற்றி ஒற்றுமையை வளர்க்கக் கருதாத மந்திரி இந்தி மொழியை ஆட்சியில் கொணர்ந்து ஒற்றுமை வளர்ப்போம் என்பது மதியின்மையும் ஏமாற்றமும் ஆகும். - தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்: இந்திமொழி எதிர்ப்பு: தமிழ்ப்பொழில் (அக்டோபர் 1937) தரவு: தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்  வாழ்வும் பணிகளும்: பக்கம். 126

thamizh kadamaigal 14: தமிழ்க்கடமைகள் 14. பொதுமொழி தேவை என்பது தவறு

தமிழ்க்கடமைகள் 14. பொதுமொழி தேவை என்பது தவறு இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : May 31, 2011  இந்தியாவின் அரசியல் பொதுமொழி வேண்டும். இந்திமொழி நாடெங்கும் பெருவழக்கிற்று. அதுவே சிறந்தது என்கின்றனர். அரசியல் வளர்ச்சிக்குப் பொதுமொழி இன்றியமையாதது என்பதே தவறு. இந்திய நாடு இந்நிலை வருவதற்கு இந்திமொழி சிறிதும் துணை செய்ததில்லை. நாட்டில் வழங்கி வரும் பன்மொழிகளும் துணைசெய்து மக்கட்கு அரசியல் உணர்ச்சியை அளித்தன. காந்தி அடிகள் ஆகிய தலைவர்கள் தென்னாட்டிற்கு வந்த காலை நாட்டுமொழி அறியாது இடர்ப்பட்டாரில்லை.  அவர்கள் கருத்துகளை அறியுமாறில்லாத தென்னாட்டினர் தடுமாறினதுமில்லை. இந்தி மொழி இந்திய நாடெங்கும் வழக்கில் உள்ளது எனுங் கூற்று ஒப்பத்தக்கதன்று. இந்திமொழி தென்னாட்டில் வழக்கில்லாதது. வடநாட்டில் சிற்சில பகுதிகளில் மட்டும் பல்வேறு உருவங்களில் வழக்கில் இருப்பது. பெருவழக்கில் இருப்பதென்பதும் மெய்க்கூற்று அன்று.  ‘ஆங்கில ஆட்சியின் தொடர்பு முழுதும் விடுபட்டு இந்தியநாடு தன்னரசு கொள்ளும் நாளில் இந்திமொழியே அரசியல் திகழ...

thamizh kadamaigal 13: தமிழ்க்கடமைகள் 13. தலை நிமிர்ந்து நிற்க

தமிழ்க்கடமைகள் 13. தலை நிமிர்ந்து நிற்க இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=8168 பதிவு செய்த நாள் : May 30, 2011 … ஆகவே, சங்க காலத்தில் தமிழ் நாட்டின் பரப்பு, வடக்கே திருப்பதியிலிருந்தும் தெற்கே பூமையக்கோடு வரைக்கும் பொருந்தி கிழக்கிலும் மேற்கிலும் கடல்களே எல்லைகளாக இருந்தன. ஒருகாலத்து வடவிமயம் வரை, தமிழ்நாடாக இருந்தது. பின்னர் விந்தியமலைவரை சுருங்கியது. … பழைய தமிழ்நாட்டின் பரப்பைப் பெறமுடியாது போனாலும், எஞ்சியுள்ள தமிழ் வழங்கும் பகுதிகளை ஒன்றுபடுத்தித் தமிழ்நாட்டின் எல்லையை வரையறுத்தல் வேண்டும். இந்தியமாப் பெருங்கடலைக் குமரிக்கடல் என்றே அழைக்கச் செய்ய வேண்டும். உலகப்பொது அரசு ஏற்படும் காலத்து நாம் உலக மக்களுள் ஒரு பகுதியினரே. மற்றைய கண்டங்களிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது நாம் ஆசியக் கண்டத்தினரே. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளாகப் பார்க்கும் காலத்து நாம் இந்தியரே; இந்தியாவிலுள்ள நாடுகளாகப் பார்க்குங்கால் நாம் தமிழரே. ஆதலின், உலகப் பொதுவரிசை விரும்பினாலும், ஆசியாவின் முன்னணியை அமைத்தாலும் இந்தியாவின் இணையற்ற வல்லரசை ஏற்படுத்தினா­லும், ‘தமிழ்நாடு’ ...

thamizh kadamaigal12 : தமிழ்க்கடமைகள் 12. உழைத்தல் வேண்டும்

தமிழ்க்கடமைகள் 12. உழைத்தல் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=8099 பதிவு செய்த நாள் : May 28, 2011 அன்று இமயம் வரையில் ஆட்சி செலுத்திய தமிழர் மரபில் தோன்றிய நாம் இன்று எந்நிலையில் உள்ளோம் என்பதை நினைக்கும் தோறும் உள்ளம் குமுறுகின்றதல்லவா? அந்தநாள் இனி வருமா? இமயம் வரையில் படையெடுத்துச் செல்லாவிடினும், தமிழ் நாட்டிலேனும் பிறநாட்டார்க்கு அடிமையாய் இராமல் வாழும் தமிழ் அரசாவது தோன்றுவதற்குத் தமிழர்கள் உழைத்தல் வேண்டும். - செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்:பக்கம் 140

thamizh kadamaigal 11: தமிழ்க்கடமைகள் 11. வேங்கடமலை தமிழர்க்குரியதே

தமிழ்க்கடமைகள்   11. வேங்கடமலை தமிழர்க்குரியதே இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=8016 பதிவு செய்த நாள் : May 27, 2011 வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த மலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாக இருந்தது. இது இப்போது திருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர், தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். - செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்: பக்கம்.31