௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 July 2025 No Comment ( உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? கடல் கொண்ட குமரிக் கண்டம் தொட்டு வடபால் எல்லையாம் பனிமலை வரை தமிழர் பரவி வாழ்ந்ததாகப் பண்டைத் தமிழர் வரலாறு கூறுகிறது . உலகுக்கு நாகரிகம் உணர்த்திய பெருமை தமிழர்க்கே உரியது! தமிழ்மொழி ஒன்றே உலகப் பொதுமொழியாக இருக்கக்கூடிய தகுதி பெற்றது என்கிறோம். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றே உலக ஒழுக்க நூலாக இருக்கும் தகுதி வாய்ந்தது என்கிறோம். ஆனால், தமிழர்தம் ஆண்டுக்கணக்கு, தமிழ்க்கணக்குகள் தமிழ்ப்பகைவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. அக்கம் பக்கம் உள்ள நாட்டினர், நாவலந்தேயத்தின் (இன்று இந்தியா) வளங்கருதிப் போந்து, பொருள்களைக் கொள்ளை கொண்டு சென்றனர். சிலர் வந்து நிலையாகத் தங்கிவிட்டனர். ஒரு மொழி வைத்து உலகாண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இன்றில்லை. முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவி தமிழ்மொழியை ஆய்ந்த...