கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு-தொடர்ச்சி)
பூங்கொடி
முத்தக் கூத்தன் கல்லறை
கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம்
சேருவ தெங்ஙனம்: செப்புதி எனலும்,
கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்? 60
மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்
பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும்,
அதனைக் காணின் அச்சம் தொலையும்,
மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்க
நெஞ்சுரம் ஏறும், நிமிர்ந்து நடப்பீர்! 65
வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்கு
நஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்;
அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்
முத்தக் கூத்தன் கல்லறை முன்போய்
நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும், 70
குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்
பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!
நாடும் மொழியும் நலம்பெற வேண்டிக்
கூடும் நீவிர் கூத்தன் செயற்றிறம்
பூணுதல் வேண்டும் பூவையீர் ஆதலிற் 75
காணுதல் வேண்டுமக் கல்லறை என்றனள்,
முத்தக் கூத்தன் வரலாறு கூறுதல்
‘நல்வழி புகன்றாேய்! நன்றி யுடையேம்
கல்லறை புகுந்த காளைதன் திறம்எமக்கு
அருளுதல் வேண்டும் ஆயிழை எனலும்,
‘பிறைநுதல் நல்லீர்! பெட்புடன் கேண்மின்! 80
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment