Posts

Showing posts from January, 2024

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         31 January 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : தொடர்ச்சி) பூங்கொடி அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்; அடித்தனர் அவனை அருங்கேன் என்றனன்; அடித்தனர் அவனை அஞ்சேன் என்றனன்; அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்! முத்தக் கூத்தன் கொலை அந்தோ அந்தோ ஆவி துறந்தனன்; 140 நொந்த அப்பிணத்தை மூடிய கல்லறை சுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான் உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும், சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின் முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்’ என் 145 றுரைத்ததன் பின்னர் ஒள்ளிழை மேலும் பூங்கொடி கடல்நகர் செல்ல இசைதல் ‘இசை, துறை வல்லாய் இரைகடல் நாப்பண் கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண் மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்; அப்பெரும் மடமை அகற்றுதல் வேண்டும் 150 ஒப்பிலா நீயும் உடன்வர இசைவு தருதி என்றனள் தாமரைக் கண்ணி, உவப்புடன் பூங்கொடி ஒப்புதல் தந்து சவக்குழிக் கல்லறை சார்வுறும் வழியே அல்லிபின் தொடர ஏகினள் அவளே. 155 (தொடரும்) கவிஞர் முடியரசன், பூங்கொடி

தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         27 January 2024        அகரமுதல இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் திரு. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதிய முதற் பதிப்பின் முகவுரை தமிழர் வீரம் என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன். படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு. இராபி. சேதுப்பிள்ளை அவர்கள். ‘ சொல்லின் செல்வர் ‘ என வள மலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும் நூல் எதுவும் தமிழகம் முழுவதும் செல்லும் நாணயம்;  நூல் நோட்ட வண்ணக்கர்  மதிப்பு பாராட்டும் வேண்டாமல் செலாவணியாகும் கலா உண்டியல். இந் நூலுக்கு முகவுரை எழுதித் தகவுபெறுமாறு என்னைத் துண்டியது என்பால் இவர்கள் கொள்ளும் அன்பைக் காட்டும்.  தமிழில் சிறந்த செய்யுட்கள் எல்லாம் அகம், புறம் என்னும் பொருட்செல்வக் கருவூலங்களாகும் . அகப் பொருள் நூல்கள் அனைத்தும் காதற் களஞ்சியங்கள். புற...

வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         26 January 2024        அகரமுதல (வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் : மனையும் மக்களும்.2 “ கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வர்ப் பயந்த புகழ் மிகு சிறப்பின் ‘” என்பது அகப்பாடல். அன்பினுக் காகவே வாழ்பவரார்?-அன்பில் ஆருயிர் போக்கத் துணிபவரார்? இன்ப உரைகள் தருபவரார்?-வீட்டை இன்னகை யால்ஒளி,செய்பவரார்? எல்லாம் பெண்கள் அன்றோ! அவர்தம் பங்கயக் கைகளின் நலத்தை நோக்கியன்றோ பாரில் அறங்கள் வளர்கின்றன. பிச்சை கேட்பவனும், “அம்மா ! பிச்சை”‘ என்றுதானே கேட்கின்றான். ஆதலின் இவ் வுலகில், “ மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ’’ என்று மகளிர் பெருமைகளைக் கவிமணி விளக்குவார் . இல்லறத்தே புகுந்த நல்லார்க்கு விளக்கம் தருபவர் நன்மக்களே. பிள்ளை இல்லாத வீடு காடென்பர் நல்லறிஞர்.  பிள்ளைச் செல்வமே பெருஞ்செல்வம்  என்பது வள்ளுவர் கருத்து.  தம்பொருள் என்ப தம் மக்கள்,  என்றே கூறுவார். ஒருவன் பெற...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : குருதி சிந்தினர்

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         24 January 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல் -தொடர்ச்சி) பூங்கொடி குருதி சிந்தினர் தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக் கடும்புயல் என்னக் கனன்றெழும் காளையர் கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்; தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர் சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி, 115 குருதி கண்டும் உறுதி குலைந்திலர் முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள் உணர்ச்சியும் அதனோ டுள்ளெழும் எண்ணமும் பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே! சிறையும் சிந்தையும் கிளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின் 120 தளர்ந்திறும் புரட்சிஎன் றுளந்தனிற் கொண்டோர் சிறையகந் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்; சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ? குறைமதி யாளர்தம் கொள்கை அஃதாம்; சிறையகம் போலச் சிந்தனை வளர்க்கும் 125 உறைவிடம் மற்றாென் றுலகில் உளதோ: எண்ணமும் கருத்தும் எலியோ பொறியுள் நண்ணிய பின்னர் நசுக்க ஒல்லுமோ? உண்ணு நோன்பு எண்ண இயலா இளைஞர் தம்முள் உண்ணா நோன்பினை ஒருவன் மேற்கொள 130 அஞ்சிய அர...

ஊரும் பேரும்65 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6. தமிழகம் – அன்றும் இன்றும்

Image
  ஃஃஃ         இலக்குவனார் திருவள்ளுவன்         20 January 2024        அகரமுதல (ஊரும் பேரும் 64 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – அருங்குன்றம் – தொடர்ச்சி) ஊரும் பேரும் 6. தமிழகம் – அன்றும் இன்றும் முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழ் மொழியே பரவியிருந்த தென்பது தக்கோர் கருத்து.  அப் பழம்பெருமையை நினைந்து, “ சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதானால் முதுமொழி நீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே” என்று  மனோன்மணியம்  பாடிற்று. அந்நாளில் கங்கை நாட்டிலும்,காவிரிநாட்டிலும் தாளாண்மை யுடைய தமிழர் வேளாண்மை செய்தனர்; வளம் பெருக்கினர்; அறம் வளர்த்தனர். கங்கைத் திரு நாட்டில் பயிர்த் தொழில் செய்த வேளாளர் இன்றும் தமிழகத்தில் கங்கை குலத்தவர் என்றே கருதப்படுகின்றார்கள். எனவே,  பழங்காலத்தில் பாரத நாடு முழுவதும் தமிழகமாகவே விளங்கிற்று. அந்நிலையில் ஆரியர் வந்தனர்; வட நாட்டில் குடியேறினர். நாளடைவில் அந்நாட்டில் ஆரியரும் தென்நாட்டில் தமிழரும் அமைந்து வாழ்வாராயினர். ஆரியர் மொழி வடமொழி யென்றும், தமிழர் மொழி தெ...

வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         19 January 2024        அகரமுதல ( வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்-தொடர்ச்சி) ௩.  மனையும் மக்களும் மனை என்னும் சொல் நாம் வாழும் இல்லத்தையும் இல்லிற்குத் தலைவியாகிய இல்லானையும் குறிப்பதாகும். மனைவி என்பது மனைக்குத் தலைவி என்ற பொருளைத் தரும்.  மனையை ஆளுபவள் மனையாள்  எனப்பட்டாள்.  மனைவியுடன் கணவன் மனையில் வாழ்ந்து புரியும் அறமே மனையறம்  எனப்படும். அதனையே இல்லறம் என்றும் இல்வாழ்க்கை என்றும் குறிப்பர்.  இல்லறம் அல்லது நல்லறம் அன்று  என்பது  ஒளவையாரின்  அமுதமொழி. மக்கள் வாழ்வு நெறிகளே நால்வகையாகப் பகுப் பர் நல்லோர். அவை  மாணவகெறி, இல்லறநெறி, மனைவியுடன் தவம்புரியும் கெறி, முற்றும் துறந்த துறவு நெறி  என்று கூறப்பெறும். இவற்றினேயே வடநூலார், பிரமசரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் எனக் குறிப்பர். இந்நால்வகை வாழ்வு நெறியுள் தலைமைசான்றது இல்லறமே. அதுவே நல்லறம் என்று போற்றுவர் ஆன்ற...