பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம்
(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி)
தமிழ்த் தெய்வ வணக்கம்
தாயே உயிரே தமிழே நினை வணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே
தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்
கிலை யென்றால் இன்பமெனக் கேது.
பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்
ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும்
மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே
சாவா வரமெனக்குத் தா.
தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே
என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால்
தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்
அடிக்கே எனையாண் டருள்.
என் பிள்ளைமைப் பருவத்திலேயே எனக்குக் கவிதை யுணர்வை ஊட்டி யூட்டி வளர்த்தவரும் என் தாய் மாமனுமான காலஞ் சென்ற கி. துரைசாமி அவர்கட்கு இந்நூலைப் படைத்து வணங்குகின்றேன்.
– முடியரசன்
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment