ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 29 July 2023 அகரமுதல ( ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி ) ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி கடம்பந்துறை சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் திருஆவடுதுறை அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை” என்று போற்றினாா் சேக்கிழாா். அத் தலம், வட மொழியில் கோமுத்தீச்சுரம் என்று வழங்கும் பான்மையைக் கருதும் பொழுது ஆவடுதுறை யென்பது ஆலயப் பெயராக ஆதியில் அமைந்திருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது. அக் கோயிலிற் கண்ட சாசனம் ஒன்று ‘சாத்தனூரில் உள்ள திருவாவடு துறை’ என்று கூறுதல் இதற்கொரு சான்றாகும். 13 சாத்தனூர் என்பது இப்பொழுது திருவா...