Posts

Showing posts from December, 2020

காதல் — ஆற்காடு க. குமரன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         31 December 2020         No Comment காதல் காயப்படுத்தி விட்டுக் களிம்பு பூசுவதும் கட்டப்படுத் திவிட்டுக் கண்ணீர் வடிப்பதும் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதும் துரோகம்  செய்து விட்டு துக்கம் கொள்வதும் பாதிக்கப்பட்டவர்க்கு பரிகாரம்  அல்ல நொடி நேரத் தவற்றுக்கு நொண்டிச் சாக்கு நொந்த மனம் தந்த தண்டனை பிராயச்சித்தம் பிரியாத என் சித்தம் ஏற்றுக்கொள் குற்றவாளிக் கூண்டில் கூனிக்குறுகி நான்! இவண் ஆற்காடு க. குமரன் 9789814114    

ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 December 2020         No Comment ஐந்தறிவின்   அலறல்   நேர்ந்து விட்டால் போதும் நான் எங்காவது வாழ்ந்து விட்டுப் போவேன் பலி கொடுக்கிறேன் என்கிறான் கிலி பிடிக்கிறது எனக்கு   பேரம் இவனுக்கும் கடவுளுக்கும் சோரம் போவது என் உயிர்   நீரைத் தெளித்தால் நிச்சயம் தலையாட்டும் எல்லா உயிரும்   மௌனம் சம்மதம் மனிதனுக்கு மட்டும் தானா? மௌனமாய் இருந்திருக்கலாம்…   மஞ்சள் நீரைத் தெளித்ததால் மண்டையை மண்டையை ஆட்டியது மரணத்திற்கு வழிவகுத்தது   சாதி மத பேதம் பார்ப்பதில்லை சாப்பிடுவதில் மட்டும் அவனிடம் வரம் பெற அறுபடும்  என் சிரம்   சம்மதம் என்று எண்ணிக்கொண்டு சரக்கென்று வெட்டி விட்டான் கற்பழிப்பு மட்டுமல்ல கருணையில்லா கொலையும் கடவுள் முன்னில்   வளர்த்த கடா மார்பில் பாயும் மனிதனின் பழமொழி வளர்த்தவனே வாயில் போட்டுக் கொள்வான் எங்களின் உயிர்ப்பலி   வெட்ட வெட்ட வளரும் என்று தெரிந்துதானே மொட்டை அடித்துக் கொள்கிறான் வெட்டிவிட்டால் செத்துப் போகும் என்று தெர...

ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா? – ப.மு.நடராசன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 December 2020         No Commen t ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா?   நானூற்று அறுபது கோடி அகவை மூதாட்டி பூமித்தாய் பூமியும் கடலும் பெற்ற குழந்தைகள் ஏராளம் ஏராளம் தாய் என்று கும்பிட யாருமில்லையே அவற்றிற்கு மனிதன் பிறந்த பிறகு கிடைத்த மதிப்பு தாய்ப்பட்டம் கடலன்னையின் சீர்வரிசை குடிநீரையே சிக்கனப் படுத்தத் தெரியாத ஊதாரி மனிதனுக்கு எத்தனை முறைதான் தூது விடுவது மேகத்தை? வெள்ளத்தை விழுங்கிப் பூமியைக் காப்பதும் பகைவர் தீண்டாது பாதுகாப்பதும் இப்படியாகக் கடலன்னையின் சீர்வரிசை எத்தனையோ! தத்துப்பிள்ளையின் வெகுமதி கருவைச் சிதைத்து முத்தைக் களவாடுவதும் காலைக்கடன் முடிக்கக் கடற்கரையைத் தேசியக் கழிப்பறையாக்குவதும் சூரியக் குளியல் என்ற பெயரில் அரை அம்மணமாகி அவளை முகம் சுழிக்கவைப்பதும் சராசரி மனிதனின் வெகுமதி இதுதான் கடலன்னைக்கு – இதுமட்டுமா சாமியாருக்குக் கூடக் குடும்பத்தான் ஆசை தக்க வெகுமதி தந்தால் தாயையும் வெட்டுவான் பூமியிலிலே அவன் பிறந்த இரு நூறு ஆயிரம் ஆண்டுகளாய் சராசரி மனிதன் தரு...

கிறித்துநாள் வாழ்த்து – ஆற்காடு க. குமரன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 December 2020         No Comment கிறித்துநாள் வாழ்த்து   என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால் என் பாவங்களால் பாதிக்கப்பட்டவரைச் சுமப்பது யார்?   பாவங்களைச் சுமப்பது மேன்மையா பாதிக்கப்பட்டவனைக் காப்பது மேன்மையா?   குற்றங்கள் மன்னிக்கப்பட்டால் குற்றங்கள் குறைந்திடலாகுமோ குற்றங்களை மன்னிப்பது குற்றங்களுக்குத் துணைபோவது அல்லவா?   இயேசுவின் இரத்தம் செயம் வாசகம் வாசித்தேன் வருத்தம் மேலிட்டது  இரத்தம் சிந்தும்  நீங்கள் பாவம் அல்லவா?   உயிர்களிடத்தில் அன்பு வை உரக்கச் சொன்ன மதம் உயிர்ப்பலி இடுகிறது இரத்தம் செயம் என்ற உங்கள் மதம் உயிர்ப்பலியை மறுக்கிறது.   வழக்கம்போல மற்றவரைப் போல் வாழ்த்து சொல்லிவிட்டுச்  சென்றிருக்கலாம் நான்   முடியவில்லை என்னால் முன்னோர்கள் வழியில் சிந்திக்க முடிந்த வரையில் புதிய பார்வையில் பார்க்கிறேன் என் பார்வையில் படுவதை என் கருத்தில் எழுவதை எழுதுகிறேன்   பரமபிதா வுக்காகப் பாவங்களைச் செய்யாது இருப்போ...

கடிகாரக் கடவுள் – ஆற்காடு க. குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 December 2020         No Comment கடிகாரக் கடவுள் ஒரே நாளில் அம்பானி ஆக முடியும் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்! ஒரே நாளில் அடிமையாகக் கூட ஆக முடியாது   வினை என்னவோ ஒரு நொடிதான் விளைவுக்கு மட்டும் காலம் தேவைப்படும் கடவுள் இருக்கிறானோ இல்லையோ ஆனால் காலம் இருக்கிறது காலம் இருப்பதால்தான் நீயும் அதைக் கடந்து கொண்டிருக்கிறாய் காலம் உன்னை முந்தி கடந்து கொண்டிருக்கிறது   கடவுள் தண்டிக்கிறானோ இல்லையோ காலம் தண்டிக்கிறது நாளும் புரிகிறது ஞாலம் சுழல்கிறது   காலம் தன் கடமையைச் சரிவர செய்வதால்தான் பிறப்பும் இறப்பும் கூட நடக்கிறது   கண்ணுக்குத் தெரியாத கடவுளை வழிபடுவதை விடக் கண்ணுக்குத் தெரிந்த காலத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்   பலருக்குப் பல பொழுதுபோக்கு எனக்கு என் எழுத்தே போக்கு என்னைக் காண்பவர்கள் காலவிரயம் செய்வதாய் நினைப்பார்கள்   என்னைப் பொறுத்தவரை நான் கால விரயம் செய்யவில்லை என் கருத்தில் இருப்பதைப் பதியம் செய்கிறேன்   வாசிக்கும் நேரம் மிகக்குற...