திருக்குறள் சுட்டும் தீமைகள் – பேரரசி முத்துக்குமார்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 மார்ச்சு 2019 கருத்திற்காக.. திருக்குறள் சுட்டும் தீமைகள் முன்னுரை உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் உள்ள சில திருக்குறள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சில எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை விளக்கும் அதிகாரங்கள் 1.குற்றம் கடிதல் (44) 2.கூடா நட்பு (83) 3.சூது (94) இந்த மூன்று அதிகாரங்களில் இரண்டினைச் சிறிய விளக்கத்தோடு காண்போம். கூடா நட்பு என்பது மனமார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது. இந்த நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான வ...