வள்ளலார் போட்ட பூட்டு!
வள்ளலார் போட்ட பூட்டு! தமிழ்மணி By கா.மு. சிதம்பரம் First Published : 29 September 2013 02:30 AM IST புகைப்படங்கள் வள்ளலார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன் புருஷோத்தமன் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு மதுரை ஞானசம்பந்தர் சுவாமிகள் மடத்திற்குச் சென்றுவிட்டார். அந்த மடாதிபதிக்கு ராமலிங்க அடிகள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த அங்கிருந்த புலவர்கள் சிலர், "இராமலிங்க அடிகளை பெரிய வித்துவான் என்று சொல்கிறார்கள்; ஆனால் கடிதம் பாமரத்தன்மையாக உள்ளது, அவருக்கு இலக்கணப் புலமை கிடையாது' என்று கூறினர். அதன்பொருட்டு இராமலிங்க அடிகள் மீண்டும் சன்னிதானத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் அந்தப் புலவர்களால் அக்கடிதத்தைப் படித்து புரிந்துகொள்ள இயலவில்லை. வள்ளலாரின் இலக்கண நுண்மான் நுழைபுலத்துக்கு இக்கடிதமே மிகச்சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இது "வள்ளலார் கடிதங்கள்' (பக்.100) என்ற நூலில் "இலக்கண நுண்மான் இயல்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுவரை இதற்கு சரியான விளக்க உரை இல்லை என்பதால், ...