நீதிநெறி விளக்கம் - படைப்பாளியே உயர்ந்தவன்
- Get link
- X
- Other Apps
மாயாத உடம்பு
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் - மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா, புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு. (பாடல்-6)
கலைமகளாகிய சரசுவதி வாழ்வது பிரமனின் நாவில் என்றாலும், அந்தப் பிரமன் வண்மையுடைய தமிழ்ப் புலவர்க்கு ஒப்பாகமாட்டான். ஏனெனில், பிரமன் படைக்கும் வெறும் உடம்புகள் மாய்ந்துவிடல் போல, புலமைச் சான்றோர் படைக்கும் நூல்கள் இறந்து போகாமல் (அழியாமல்) நிலைபெறும். இப்பாடல் வழி, "உயிர்களைப் படைப்பவனைக் காட்டிலும் இலக்கியம் படைப்பவனே உயர்ந்தவன்' என்கிறார் குமரகுருபரர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment