தமிழ்கூறும் நல்லுலகம்
தமிழ்கூறும் நல்லுலகம் By இ.கி.ம. First Published : 01 September 2013 02:38 AM IST புகைப்படங்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-ஆவது வெளியீட்டு விழா மலரில் இடம்பெற்ற டாக்டர் தனிநாயக அடிகளின் "தமிழ்கூறும் நல்லுலகம்' கட்டுரையின் (மிக நீண்ட) சுருக்கம் இது. தமிழுக்குச் "செம்மொழி' அந்தஸ்தைப் பெற்றுத்தந்த அன்னாரின் நினைவு நாளான இன்று (1.9.1980), "தமிழ்கூறும் நல்லுலகம்' படைத்த அன்னாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றென்றும் நினைவுகூரட்டும்! ளிநாடுகளில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றுவதற்குத் தமிழறிஞர்களுக்குக் கணக்கற்ற வாய்ப்புக்கள் உள. கீழ்த்திசை நாடுகளில் தமிழ்ப் பண்பாடு மிகவும் பழைமையான காலத்திலேயே பரவியதும் சாவகம், சுமத்திரா போன்ற இடங்களுக்கு, இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரேயே தமிழ்மக்கள் குடியேறி இருக்க வேண்டுமென்பது ஹைனே கெல்டேர்ன் போன்ற அறிஞர்களின் கருத்து. இந்தோனேசிய மொழியில் வழங்கும் சொற்கள் பல, அம்மக்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்பைக் குறிப்பன. எடுத்துக்காட்டாக, கப்பலைக் "க...