சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி- முனைவர் ஆ.மணி
புதன், 13 சூலை, 2011 சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞராகிய சி. இலக்குவனார் அவர்கள் தொல்காப்பியத்தை மக்களிடயே உலவச் செய்யும் நோக்கத்துடன் தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற நூலை 1961இல் எழுதி வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1971இல் புதுக்கோட்டை வள்ளுவர் பதிப்பக வெளியீடாக வந்தது. தொல்காப்பியம் த்ழர்களும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்புவோரும் தறாது கற்றறிய வேண்டிய தனிப்பெரும்நூலாகும் என்ற பதிப்புரைக் கருத்து மெய்மையே. இந்நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகளில் பெரும்பேராசிரியர் தமிழண்ணலும் உதவியிருக்கின்றார் என்பது குறிக்கத்தகுந்த செய்தியாகும். தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூல் 1. படையல், 2. பதிப்புரை, 3. முன்னுரை, 4. எழுத்து, 5. சொல், 6. பொருள், 7. குறிப்பு அகராதி ஆகிய ஏழு கூறுகளைக் கொண்டது. திருக்குறட் கழகத்தின் பொறுப்பாளர் கோவிந்தசாமி என்பாருக்கு இந்நூல் அன்புப் படையல் ஆக்கப்பட்டுள்ளது. முன்னுரை 22 பக்கங்களில் தொல்காப்பியரின் காலத்தை ஆராய்ந்து, அவர்காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என முடிவுரைக்கின்றது. தொல்காப...