மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் By புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம் First Published : 31 March 2013 01:25 AM IST மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும் மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும் இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம் வினவினார். "நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று. ஒரு...