Posts

Showing posts from November, 2012

thirukkural 173 & 240

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். ( குறள் எண் : 173 ) மு.வ : அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார். சாலமன் பாப்பையா : அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார். No deeds of ill, misled by base desire,,, Do they, whose souls to other joys aspire. ( Kural No : 173 )   Kural Explanation: Those who desire the higher pleasures (of heave...

பேராசான் இலக்குவனாரே ! - Poem about Dr.S.Ilakkuvanar

பேராசான் இலக்குவனாரே ! பதிவு செய்த நாள் : 17/11/2012 நட்பு இணைய இதழ் அய்யா.வணக்கம். ” நம் செந்தமிழைச் சிறை பிடிப்பதை விடுத்து என்னைச் சிறை பிடியுங்கள் ; அதுவே நான் பெறும் பேறு ஆகும் ” எனக்கூறி சிறைஏகிய மொழிப் போராளி டாக்டர் இலக்குவனாரின் பிறந்தநாள் நாளை (17)அவர் பற்றிய கவிதை ஒன்று தங்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன். அவரைச் சிறை பிடித்தபோது புலவர் மணி இளங்குமரனார் ” கன்னித் தமிழ் காக்க கால்நடைப் பயணம் செய்தால் தமிழ்ப் புலவர் காலை வெயில் சுட்டு விடும். பட்டுப் போகும் ஆட்சி எனச்சிறை பிடித்து விட்டனரோ?” என்னும் பொருளில் எழுதியது என் நினைவுக்கு வருகிறது. பெ. ஆ. 134 தொ. ஆ. 2877 தி. ஆ. 2043 நளி ( கார்த்திகை ) 02 ( 17 – 11 – ‘ 12 ) நெஞ்சம் நினைக்கிறது ! சீர்பெற் றிலங்கும்நம் செந்தமிழ் வளர்ச்சிக்கு வேர்ஆக இருந்தபன் னூறு அறிஞர்களில் தூர்ஆக விருந்து துலங்கச் செய்தாரில்ஆணி வேர்ஆக விளங்கிமொழிப் போர...

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு - Prof.Dr.S.Ilakkuvanar

Image
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு பதிவு செய்த நாள் : 16/11/2012 நட்பு இணைய இதழ் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன் என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும்,  சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,  இதழுரைகள், நூல்கள் எழுதும் பொழுதும் தமிழ்க்காப்பு பற்றியும் தமிழ் மீட்பு பற்றியும் தமிழர் எழுச்சி பற்றியும் பேராசிரியர் உணர்த்திடத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டிற்காக  சில இலக்கியக் குறிப்புகளை மட்டும் நாம் பார்ப்போம். பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தொல்காப்பிய விளக்கம், சங்க இலக்கிய...

பாடிப் பறந்த குயில்' கே.சி. எசு.அருணாசலம்!

பாடிப் பறந்த குயில்' கே.சி. எசு.அருணாசலம்! By திருப்பூர் கிருட்டிணன் First Published : 28 October 2012 01:21 AM IST பார்ப்பதற்கு வெள்ளை வெளேர் என்றிருப்பார் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம். அவர் உடல் நிறம் மட்டுமல்ல, மனமும் அப்படியொரு வெள்ளை. சூதுவாது அறியாதவர். பொதுவுடைமைச் சிந்தனைகள் கொண்ட புரட்சிக்காரர். பழகுவதற்கு இனிய பண்பாளர். மூக்கில் போடும் அணிகலனான மூக்குத்தியை தமிழ்க் கவிதை ரசிகர்களின் காதில் போட்டு அழகு பார்த்தவர், ""சின்னச் சின்ன மூக்குத்தியாம் சிகப்புக் கல்லு மூக்குத்தியாம், கன்னிப் பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்'' என்ற புகழ்பெற்ற திரைப்பாடல் அவர் எழுதியதுதான். "பாதை தெரியுது பார்' என்ற திரைப்படத்தில், பாரதி அன்பரான எம்.பி. சீனிவாசன் இசையில், டி.எம். சௌந்தரராஜனின் இனிய குரலோடு கூடிய திருத்தமான உச்சரிப்பில் ஒலித்த காலத்தை வென்ற பாடல் அது. ÷""வெற்றிலை போட்டு உன் வாய் சிவக்கும்; முகம் வெட்கத்தினாலே சிவந்திருக்கும்; உழைத்துன் மேனி கறுத்திருக்கும்'' என்று வளரும் அந்தப் பா...